பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 35



நமது காங்கிரசு அரசு மூன்று மனைவிகளுக்கு அல்லவா கணவனாக இருக்க வேண்டியிருக்கிறது!

கதர்--மூத்த மனைவி
ஆலைகள்--தேசியப் போராட்டத்தின் போது,
'தேவை' எனத் தேடிப் பெறப்பட்ட அவற்றின்
முதலாளிகள்--இரண்டாம் மனைவி.
கைத்தறி--மூன்றாம் மனைவி; அதுவும் கண்ணீரைப்
பார்த்த பின்!

இப்படி, கதர் உற்பத்தியும் வேண்டும்--ஆலை அரசர்களின் தயவும் வேண்டும்--கைத்தறியும் வாழ வேண்டும் என்று கருதுகிறது அரசாங்கம்!

சாத்தியமாகுமா?

அன்பர் ஆச்சாரியார், இதனால்தான்--அவர் ஆட்சிப்பீடத்தில் இருந்த போது--இந்தக் கைத்தறிப் பிரச்சினைக்காக-தெளிவாக ஒரு தீர்மானத்தைச் சட்ட சபையில் நிறைவேற்றினார். அன்பர் ஆச்சாரியார் கூறுவனவற்றை எப்போதுமே சற்று சந்தேகத்துடன் உற்று நோக்கும் நானே, இந்தப் பிரச்சினையில் அவர் கருத்தை 'முழுமனதுடன் ஆதரித்தேன்; "சேலை வேட்டிகளின் உற்பத்தியைக் கைத்தறிகளுக்கே ஒதுக்க வேண்டும்" என்ற அந்தத் தீர்மானத்திற்கு--இதுவரை எப்போதும் கிடைக்காத வகையில் எல்லாக் கட்சிகளின் ஒருமுகமான ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றி-டில்லிக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் டில்லி மத்திய அரசாங்கத் தொழில் மந்திரியாயிருக்கும் டி.டி. கிருஷ்ணமாச்சாரி கைத்தறியுடன் ஆலைகள் போட்டி போடுவதைத் தடுக்க முடியாது' என்று கூறிவிட்டார்.

போட்டியைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியவர் ஆச்சாரியார்! அதைக் கூடாது என்று கூறுபவரும் ஒரு டி. டி. கிருஷ்ணமாச்சாரி--அவரும் தென்னாட்டுக்காரர்தான்!