பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 37



பேசிக் கொள்ளலாம். இப்போது 'காய்ச்சல் விட்டால், கை கால் பிடிப்பு விடும், என்பதை மட்டும் கூறிக் கொள்வோம்!

கைத்தறி நெசவாளர்கள் நெய்த அருமையான துணிகள் இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன; அந்த வண்ணத் துணிகள், கண்ணைக் கவரும் வகையில் ஒளிவிளக்குகளுக்கு மத்தியில் இருக்கின்றன!

ஆனால், அவைகளை நெய்த நெசவாளர்கள், இருள் நிறைந்த குடிசைகளில் வாழ்கின்றார்கள்.

அவர்கள் வாழும் குடிசைகள் மட்டுமல்ல இருள் நிறைந்தது--அவர்களின் வாழ்வே இருள் நிறைந்து கிடக்கிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள துணிகளை நாங்கள் பார்வையிட்டோம்; தலைவர் பி.டி. இராசன் அவர்கள் கூட, 'இவ்வளவு அருமையான துணிகளை நெய்யும் நெசவாளர்கள் இந்தக் காலத்தில் இன்னும் பட்டுப் போகாமல் இருப்பது, ஆச்சரியமாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அத்தகைய கைத்திறனும்-நுணுக்கமும் கொண்ட நெசவாளர்கள் பரிதாபத்துக்குரிய அவல நிலையில் இருக்கிறார்கள்.

எங்களுக்கு இந்தத் துணிகளைச் சுற்றிக் காட்டிக் கொண்டுவந்த சங்கத் தலைவர், ஒவ்வொரு ரகக் கைத்தறித் துணியையும் காட்டி--அதற்கு சமமான ஆலைத் துணியின் பெயரையும் விளக்கினார்; காஷ்மீர் சால்வையா?--திருச்செங்கோட்டு நெசவாளர்கள் நெய்த போர்வை இதோ என்று, ஆலைத் துணிகளில் உள்ள ஒவ்வொரு ரகத்துணியையும் எங்களுக்குக் காண்பித்தார்கள்.

'கைத்தறிக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை, மிக பயங்கரமானதாக இருக்கிறது' என்று வரவேற்றுப் பேசிய நாச்சிமுத்து அவர்கள் குறிப்பிட்டார்கள் — கழகம் கைத்தறித் துணிகளைத் தோளில் தூக்கி விற்றது குறித்து,