பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறிஞர் அண்ணா நானும் - கழகத் திருச்சியில் தோழர்களும் துணிவிற்பனையில் ஈடுபட்டிருந்த போது, நண்பர் உடுமலை நாராயண கவி அவர்கள் கைத்தறித் துணி விற்பனைக்காக இயற்றியிருந்த பாடல் ஒன்றை நண்பர் அனீபா பாடிக் கொண்டிருந்தார்; அந்தப் பாடலின் "சின்னாளப்பட்டி" என்ற ஊரில் நெய்யப்படும் துணிபற்றியும் ஒரு பாடல் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஒருவர் கூட்டத்திலிருந்து ஓடி வந்து கீழே விழுந்து கும்பிட்டு, 'நீங்கள் பாடியிருக்கிறீர்களே, சின்னாளப்பட்டி நெசவு பற்றி - அந்த சின்னாளப்பட்டியைச் சேர்ந்த நெசவாளன்தானய்யா நான்; தலையில் இருப்பது 15 சேலைகள் - நான் நெய்தவை; கடந்த நான்கு நாட்களாக திருச்சியில் அலையாத தெருவில்லை; கூவாத குரலில்லை, ஒரு சேலையும் விற்கவில்லை; குடும்பமே பட்டினி என்று கதறி அழுதார். அந்தக் காட்சியைக் கண்டவர் எவரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது! அப்படி நெசவாளர்கள் துன்பப்படுகிற நிலைக்கு மாற்றந் தேடித்தராத எந்த ஓர் அரசாங்கமும், வெட்கத்தால் தலை குனியாமலிருக்க முடியாது! நெசவாளர்கள் கையேந்தி பிச்சையெடுக்க வெட்கப்பட்டு-அட்டைகளில் தங்களின் அவல நிலையை எழுதி- தெருக்களில் போவோர் வருவோரிடம் காலணா, அரையணா பெற்று வயிறு கழுவினார்களே- அந்தக் காட்சிகளை யாரும் மறக்க முடியாது! அந்த நிலையை மாற்ற அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்-நன்றி செலுத்துகிறோம்! நெசவாளர்கள் அன்றுபோல் இன்று பிச்சை எடுக்காவிடினும், ஓரளவு வாழ் வழி ஏற்பட்டிருக்கிறது என்றாலும், இப்பொழுது வரும் செய்திகள் நமக்கு அச்ச மூட்டுகின்றன.