பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 39



ரூ.2 கோடி பெறுமானமுள்ள கைத்தறித் துணிகள் தேங்கிக் கிடக்கின்றன என்றால், என்ன பொருள்? நெசவாளர்களின் கண்களில் நீர் தேங்குகிறது என்பதுதானே அதன் அர்த்தம்?

துணிகள் விற்பனையாகாமல் தேங்கினால்--நெசவாளர் உற்பத்தி செய்ய முடியாது; உற்பத்தி செய்யாவிடின் கூலி கிடையாது; கூலி இன்றேல் சோறு இல்லை; வறுமை வாட்டும்; பசி, அவர்களைப் பிய்த்துப் பிடுங்கும்; எனவே அந்த நிலைமை அவர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்; வாயளவில் அனுதாபம் காட்டுவதுடன் அரசாங்கத்தின் கடமை முடிந்து விடாது-விடக்கூடாது.

கைத்தறியாளர் மீது அனுதாபம் கொண்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் துணிவாங்கும் சக்தி இல்லை; நாட்டுப் பொருளாதாரம் அப்படி இருக்கிறது; எனவே புதுத்துணி வாங்கப்படும் பொங்கல் தாளையொட்டி, இந்தக் கைத்தறி வார விழாக் கொண்டாடப்பட்டால், ஏராளமான கைத்தறி விற்பனையாகும் மார்க்கம் உண்டு. சென்னை மாநிலத்தைப் பொறுத்தவரையாயினும்--அகில இந்தியாவிலும் இல்லா விடினும்--இந்தப் பொங்கல் நாளில் விழாக் கொண்டாடப் பட்டால், கைத்தறி விற்பனையில் கணிசமான முன்னேற்றம் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

பொதுமக்கள் மட்டுமே ஆர்வம் கொண்டவர்களாகவும்--ஆதரவு காட்டுபவர்களாகவும் இருந்தால் போதும் என்று அரசாங்கம் கருதிவிடக் கூடாது.

மத்திய அரசாங்கம் இராணுவத்திற்கென்று மட்டும் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் செலவிடுகிறது. அந்த இராணுவத்தினருக்குத் தரப்படும் ஆடைகளைக் கைத்தறி ஆடைகளாகவே மத்திய அராசாங்கம் வாங்க வேண்டும்; அப்படிச் செய்தால், ஒரு ரூபாய் பெறுமானமுள்ள துணிகூடத் தேங்காது விற்பூ ஆலைத்