பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ♦ அறிஞர் அண்ணா



துணிகளைப் போன்றே நல்ல தரமும்-உழைப்பும் கொண்டவைதானே கைத்தறித் துணிகளும் !

அதைப் போலவே மாநில அரசாங்கமும்--போலிசு இலாக்காவுக்கு துணிகளைக் கைத்தறியாகவே வாங்க வேண்டும்; அவர்களுக்குத் தேவையான முறுக்கும், மினுக்கும் கைத்தறியில் தான் நெய்யப்படுகின்றன; இந்த எனது யோசனைகளைக் கைத்தறி வார விழாவில் கூறுவது பொருத்தமென்றே கருதுகின்றேன்.

இப்படி உருப்படியான துணி விற்பனைக்கு வழியும்--தொழிலுக்கு நிரந்தரமான பாதுகாப்பும் தர அரசாங்கம் முன்வர வேண்டும்.

அதை விடுத்து, 'கைத்தறியும் வாழ வேண்டும்--ஆலைத் துணியும் போட்டியிடும்' என்றால் எப்படி? புலி போல் இருக்கும் ஆலையும், பசுபோல் இருக்கும் கைத்தறியும் எப்படி ஒன்றாக வாழ முடியும்?

சர்க்கஸ் கம்பெனியில் வேண்டுமானால், புலியையும், பசுவையும் ஒன்றாகச் சிறிது நேரம் வாழச் செய்ய முடியும்; அது போலவே சர்க்காரும், சர்க்கஸ்காரரைப் போல ஆலையையும் கைத்தறியையும் வாழவிட நினைக்கிறார்கள்.

சில நேரங்களில் வரும் செய்தி, புலி, சர்க்கஸ்காரன் கையிலிருக்கும் சாட்டையையும்-சர்க்கஸ்காரரையுமே கூட மீறி பசுவின்மீது பாய்ந்து விடுவதாகக் கூறுகின்றன!

சில நேரங்களில், சர்க்கஸ்காரனுக்குக் கூட புலியால் ஆபத்து என்பதைப் போல, இந்த அரசாங்கமும்,இந்தக் கைத்தறிப் பிரச்சினையில் செய்துவரும் சர்க்கஸ் வேலையில் ஆபத்துக்கு ஆளாகக் கூடாது என்று ஆசைப்படுகின்றேன்.

(23-3-55ல் சென்னையில் நடைபெற்ற கைத்திறி வார விழாவில்

அண்ணா)