பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 41


13. கைத்தறி நெசவாளர்கள் பற்றி
அண்ணா


ஒரு காலத்தில் உலகம் பார்த்து வியப்படையக் கூடிய வகையிலே உயர்ந்த முறையில் நெசவு செய்து புகழ் பெற்ற நம் நாட்டு நெசவாளர்களுக்கு ஏன் இன்று இந்த நிலை? அவர்கள் பல நெருக்கடிகளுடனேயே வாழ வேண்டியிருக்கிறது; நெசவாளியும் நெருக்கடியும் ஒன்றாக பிறந்தது போல் என்றைக்கும் ஏதாவது ஒரு நெருக்கடி அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு காலத்தில் நெய்வதற்கு நூல் கிடைக்காது; நூல் கிடைத்தால் மற்ற சாதனங்கள் கிடைக்காது; எல்லாம் கிடைத்து நெய்தால், துணி விலை போகாது; தக்க ஊதியம் கிடைக்காது; இந்த நிலையைத்தான் கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்டு வந்திருக்கிறோம்; இதற்கு ஒரு பரிகாரம் கண்டாக வேண்டும்.

"நோயுற்றிருக்கும் ஓர் ஆள், இனிப் பிழைக்கவே முடியாது' என்றால், அவனை அழைத்துச் செல்ல. வேண்டிய இடம் வைத்தியன் வேறு; பிழைப்பான் என்றால் அழைத்துச் செல்ல வேண்டிய இடமும் வைத்தியனும் வேறு; பிழைக்கவே கூடாது என்றால் அதற்கான இடம் வேறு; அதைப் போல் கைத்தறிப் பிரச்சினையிலும் ஒரு முடிவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்."

ஆண்டுக்குப் பத்துக் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை இந்தியாவுக்குத் தேடிக் கொடுத்துக் கொண்டு--இந்த விஞ்ஞான யுகத்தையும் சமாளித்துக் கொண்டு ஆலைகளுடன் போட்டியிடக் கூடிய ஒரு தொழிலாக இருக்கிறது இது!

நான் ஏதோ கனவு காண்பதாக நினைக்க வேண்டாம்; உண்மையிலேயே இந்த நாட்டை--