பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ♦ அறிஞர் அண்ணா



தென்னகத்தை நாமே ஆளும் நிலை வருமானால், அமெரிக்காவுக்கு மேஜை விரிப்புத் துணி மட்டும் இங்கிருந்து கைத்தறித் துணியாக அனுப்பி--அதன் மூலம் ரூபாய் 50 கோடி அந்நியச் செலாவணியை நாம் பெற முடியும், உலகம் பார்த்து மெச்சக் கூடிய-பாராட்டக்கூடிய நிலையில் முன்பிருந்த நிலையை நாம் மீண்டும் பெறமுடியும்.

இந்தக் கைத்தறித் தொழிலுடன் எனக்குள்ள தொடர்பும் அக்கறையும், நான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்த நேரத்தில் மட்டுமன்று--அதற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது; இதற்குக் காரணம், நான் பிறந்து--வளர்ந்து--வாழ்ந்து வருகின்ற காஞ்சிபுரம், நெசவாளர்கள் நிறைந்துள்ள பகுதியாகும்.

காஞ்சிபுரம் என்பது--நெசவாளர்கள் நிரம்பிய பேட்டைகளும், பாளையங்களும், வீதிகளும் நிறைந்துள்ளதாகும். நெசவுத் தொழிலை நம்பியுள்ள மக்கள் நிறைந்த பகுதியில் வாழ்கின்ற காரணத்தால், பல ஆண்டுகளாக அவர்களது சிரமங்களை நேரடியாக உணர்ந்துள்ள நான், இந்தத் தொழிலின் மீது அக்கறை காட்டுவது இயற்கையே!

நெசவாளர்களின் துன்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கின்றது; அதற்குரிய பரிகாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

நூல் எப்போதும் சிக்கலுக்கு ஆளாவதுதான்; நூலுடன் தொடர்பு கொண்டுள்ள நெசவாளர்களின் வாழ்க்கையும் சிக்கல் கொண்டதாகத்தான். இருக்கும்; பக்குவமாக அந்தச் சிக்கலை நீக்குவது தான், இப்போது நாம் செய்ய வேண்டிய வேலை!

இந்தச் சங்கத்தை நடத்துபவர்கள், எந்த அளவு முயற்சி எடுத்துக் கொண்டு இந்தச் சிக்கலைப் பக்குவமாக நீக்க வேண்டுமோ--அந்த அளவு முயற்சி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்!