பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ♦ அறிஞர் அண்ணா



பற்றி--நீடித்து உழைக்கும் தரத்தைப் பற்றி அய்யப்பாடோ, 'நெசவாளியின் நேர்மை--நாணயம் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்' என்றோ யாருக்கும் தோன்றாது.

அப்படிப்பட்ட நெசவாளர் குடும்பங்கள் பல இன்று ஏழ்மையிலே உழலுகின்றது! அவர்களிடம் உள்ள தொழில் திறனை வேறு எதிலும் காண முடியாது! இருந்தும் இலட்சக்கணக்கான கெசமுள்ள கைத்தறித் துணி தேங்கிக்கிடக்கிறது நாட்டில்!

கைத்தறியாளர்கள்--புதுப்புது 'மோஸ்தர்'களைக் கண்டு பிடிக்கிறார்கள்! ஆவைக்காரர்கள் கூட அப்படிக்கண்டு பிடிக்க முடியாது.

நெசவாளி-தான் மட்டுமா வேலை செய்கிறான்? அவனுடைய மனைவியும், மகனும் கூட அல்லவா வேலை செய்கிறார்கள்? இருந்தும் வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை! மாலை 6 மணிக்கே எங்கள் ஊர்ப் பிள்ளையார்ப் பாளையத்தில் விளக்கை அணைத்துத் தூங்கி விடுகிறார்கள்--'இரவு பத்து மணி வரை விழித்தால் விளக்கு எண்ணெய் செலவாகுமே என்று! அப்படிப்பட்ட கேவலமான நிலையில் வாழ்க்கை நடத்துகிறார்கள்! அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லை! அவர்கள் வாழ்வு வளம் பெற வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதே நம் குறிக்கோள்!

(1967-ல் அண்ணா அவர்களின் உரை)


14. கைத்தறி

"கைத்தறித் தொழிலுக்கு உதவும் வகையில் கூட்டங்களில், 'மாலைகளுக்குப் பதிலாகக் கைத்தறி ஆடைகளை அணிவியுங்கள்' என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னபொழுது பலர் கேலி பேசினர்; ஆனால், இன்றையத்தினம், எல்லா அரசியல் கட்சிகளைச்