பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ♦ அறிஞர் அண்ணா



16. விவசாயி

உழைப்பவர்களுக்கு முழு உரிமை கொடுத்தால்தான் உழைப்பெல்லாம் செல்வக்குவியலாக மாறும், உழைத்தவர்கள் தாம் நாம்; மேலும் உழைக்க ஆரம்பித்தால் எந்த நாடும் நமக்கு ஈடாகாது.

உழவனின் உள்ளத்திலே புயல் இருக்குமானால் வயலிலே வளம் காணமுடியாது.

விவசாயிக்குத் திருப்தி ஏற்பட்டாலொழிய, அவர்கள் வாழ்வில் நிம்மதி ஏற்பட்டாலொழிய, அவர்களின் உழைப்பு வயிற்றுப் பாட்டுக்கு வழி செய்தாலொழிய முன்னேற்றம் அடைந்ததாகக் கூறிவிட முடியாது.

உழைப்புக்கு மதிப்பளித்து வந்தால்தான் உற்பத்திப் பெருகும்.

அடுத்த பத்தாண்டு காலத்திற்குள் நில உடைமைக் காரர்களுக்கும்--நிலத்தை உழுபவர்களுக்கு மிடையேயுள்ள வேற்றுமை மறைந்துவிடும். வயல்களில் பட்டதாரி விவசாயிகள், டிராக்டர்களை ஓட்டுவதைக் காணப் போகிறோம்.

விளைச்சல் நிலங்களைத் தரிசாகப் போடுவது சமூகக் குற்றம்.

பாடுபடுகிற உழவர்களுக்கு நிலம் சொந்தமானால் அவர்கள் நிமிர்ந்து நடப்பார்கள். அவர்களுடைய நெஞ்சத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எனவே பண்படுத்திய பின் ஒப்படைக்கும் இத்திட்டத்தை வகுத்து செயலாற்றவிருக்கிறோம்.

படித்தவன் உழவேண்டும்--உழுபவன் படிக்க வேண்டும். படிப்பவன் அறிவுப் பசியைத் தீர்க்க-உழுபவன் உற்பத்தியைப் பெருக்க--என்ற நிலை ஏற்பட வேண்டும்.

புதிய முறைகளையும், கருவிகளையும் கொண்டு இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதிலே மற்ற-