பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 49 நாடுகளைவிட நாம் மிகப் பின்னணியில் இருப்பதால் இங்கு சுவையற்ற, கவைக்குதவாத வாழ்க்கையை நடத்துவதற்கே மிகப் பெரும்பாலான மக்கள் மாடுடன் உழைக்கிறார்கள். மனித உழைப்பு மிக மிக அதிகமான அளவிலேயே செலவிடப்படுகிறது. மனிதன் பிணமாகா திருக்க, நல்வாழ்வுபெற அல்ல-சாகாமலிருக்க! விளை நிலத்தைத் தரிசாகப் போட்டால் நிலத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி தந்து அதிக விளைச்சலை உண்டாக்குவோம். 17. தொழிலாளி-கரை காணாதவன் பள்ளம் காடு நிலமானதும், வனம் தோட்டமானதும், மேடு மாளிகையானதும், கரம்பு ஊற்றானதும், பாதையானதும், பாட்டாளியின் உழைப்பினால்; ஆனால் அவன் - அந்த உழைப்பிற்குப் பிறகு - அதனாலான உல்லாசங்களை அனுபவிக்கின்றானா என்றால் இல்லை! தோட்டத் தொழிலாளியின் வியர்வை வாடை அவனது உழைப்பால் மலர்ந்த மலரில் இராது! அவனது வாழ்க்கையோ - கசப்பு! அவன் பயிரிட்டுப் பிறருக்குத் தரும் கனியோ- சுவையுள்ளது! பூமிக்கு அடியில் இருந்து அவன் செல்வத்தைச் செதுக்கி எடுத்துத் தருகின்றான்; பிற்கோ, அதன்மீது பணம் படைத்த பிரதாபன் உலவுவதைக் காண அண்ணாந்து பார்த்துவிட்டு. தனது குடிசையில் கூரையின் ஒழுகலைக்கண்டு மனம் கசிகிறான்! கடலில் குளித்து, சுறாவும்-பிறவுக்கும், இரையாகாது தப்பி முத்து எடுக்கிறான். பின்னர் அது,யாருடைய கழுத்திலோ மாலையாகிறது-கைவளையாகிறது, காதுகளில் நடனமாடுகிறது! ஆனால் அந்த முத்தை எடுத்த தொழிலாளியோ-வறுமைக் கடலில் நீந்தி நீந்தி கரை 2.5.