பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ♦ அறிஞர் அண்ணா



காணாது கலங்குகிறான். உழைப்பின் உறுபயனை அனுபவிக்க முடியாமல் அல்லற்படுகிறான்.

ஆளவந்தாரே---தயக்கமேன் !

புதிதாக பீடம் ஏறியுள்ளவர்களுக்கு, தங்கள் நாட்களிலே, "மக்களுக்குப் புதிய வாழ்வு பிறக்க் வேண்டும்--பஞ்சமற்ற பிணியற்ற, அதிருப்தியற்ற வாழ்வு இருக்க வேண்டும்" என்ற எண்ணம் இருக்கிறதாம்--நெடு நாட்களாக ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசியிருக்கிறார்கள்--வாக்களித்திருக்கிறார்கள்--சூளுரைத்திருக்கிறார்கள்! ஆனால் மக்களோ, என்றுமில்லாத அளவுக்கு--எங்குமில்லாத அளவுக்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! எவ்வளவு பெரிய கதர் சால்வைகொண்டு மூடினாலும் நிலைமை மறையவில்லை. எங்கும் 'இல்லை, இல்லை' என்ற பேச்சுத்தான்--என்ன செய்ய!

மக்கள் கேட்கிறார்கள்--"ஏன் மனச் சோர்வு கொள்கிறீர்கள்? எம்மை ஈடேற்றும் வழி தெரியாது ஏன் திகைக்கிறீர்கள்? நீங்களே கூறியிருக்கிறீர்களே--தொழில்களை லாப வேட்டைக்காடு ஆக்கியதனால்தான், நாட்டிலே மிருக உள்ளம் படைத்த மனிதர்கள் தோன்றி விட்டனர்; இனி மக்களுக்குத்தான் தொழில்கள்-- இலாபத்துக்காக அல்ல -மக்களின் நன்மைக்காக' என்றெல்லாம் கூறினீர்களே! திட்டம் தீட்டிக் காட்டினீர்களே! பொது மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழில்களை எல்லாம் சர்க்காரே ஏற்று நடத்தும் என்று சூளுரைத்தீர்களே! நன்றாக கவனமிருக்கிறதே--வெண்கல நாதத்தில், 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று நீங்கள் பாடிய பாரதி கீதம்! ஆற்றல் மிக்கோரே-எமது அன்புக்குரியவர்களே--எம்மை ஆளவந்தாரே--ஏன் தயக்கம், தடுமாற்றம்? திட்டத்தை நிறைவேற்றுங்கள்--தொழில்களை பொதுவாக்குங்கள்--சர்க்கார் உடமையாக்குங்கள்--ஜாரைக்