பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 51



கருவிலேயே அழியுங்கள்" என்று கூறுகின்றனர், மக்களின் குரலில் வேதனையும் ஆத்திரமும் சம எடையில் இருக்கிறது.

மகாஜனங்களே! கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்; தொழில்களைத் தேசிய மயமாக்கும் திட்டத்தை நாங்கள் விட்டுவிடப் போவதில்லை; இடையிலே உற்பத்தியைப் பெருக்குங்கள்; ஓய்ந்துவிடாதீர்கள்; காய்ந்து கிடக்கும் வயல்களையும் பசுமையுறச் செய்யுங்கள்; தூங்கிக் கிடக்கும் புதை பொருட்களை எழுப்பி வெளியே கொண்ட வாருங்கள்; கட்டுக்கடங்கா ஆறுகளை, ஆற்றல் தரும் வழிகளாக்குங்கள்; உற்பத்தியைப் 'பெருக்குங்கள்' பெருக்குங்கள்' என்று சர்க்கார் கூறுகிறது!

பாட்டாளி சிரித்துக் கொண்டே அழுகிறான், சொல்லாமல் சொல்லிக் கொள்கிறான்-

"நான் வ்யிறாற உண்ண உணவில்லை-என்று கூறி எனக்கு வாழ்வு அளிக்கச் சொல்லுகிறேன். நீயாகவே, முன்பு வாக்களித்தாயே என்பதால்; நீ, இப்போது என்னை, 'காய்ந்த வயிற்றைப் பிறகு பார்த்துக் கொள்; உற்பத்தியைப் பெருக்கு என்று கூறுகிறாயே, அப்பனே! ஆளவந்தானே! உற்பத்தி என்றால் என்ன உத்தியோக உத்தரவு போலவா,எழுதிவிட? உயிரைப் பணயம் வைத்து--உழைத்து--உருக் குலைந்து அல்லவா உற்பத்தியைப் பெருக்க வேண்டும்? அணுவணுவாக எங்களை உழைப்புச் சிதைக்கிறது? மாடி மாடியாக முதலாளி கோட்டை உயருகிறது! நீ மேலும் உழைக்கச் சொல்லுகிறாய்! செய்யலாம் என்றால். சக்தி இல்லையே! உழைத்து அலுத்துக் கிடக்கும் எங்களிடம் அதிகரித்த உழைப்பை எதிர்பார்க்கிறாயே! குமுறும் நெஞ்சினராகிவிட்ட எங்களை, குப்புற விழாதே குப்பா... எழுந்திரு-வேலை செய்' என்று கட்டளை இடுகிறாயே - எப்படி எங்களால் முடியும்? சக்தி