பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ♦ அறிஞர் அண்ணா



வேண்டுமே உழைக்க! சாந்தி வேண்டுமே மனதில்! அதற்கு என்ன வழி"

என்று பாட்டாளிகள் கேட்கின்றனர்--இவ்வளவு தெளிவாக அல்ல-கண்ணீராலும், பெருமூச்சாலும்!

"கண்ணீர் விடுகிறான்.........
கருணை காட்டாதே"

என்று சர்க்காருக்குக் கூறுகிறது முதலாளித்துவம்! அதற்கு அஞ்சியே டெல்லி ஆட்சியினர் தேசிய மயமாக்கியுள்ள இரண்டொரு தொழில் நிலையங்களை மீண்டும் முதலாளித்துவத்தின் கூட்டு முகாமில் ஒப்படைக்க விரைந்தோடுகிறது; நம் சென்னை அரசியலாரும் அதனைத் தொடர்ந்து திருப்பல்லவியைப் பாடுகின்றனர். தமிழ் நாட்டின் சில மாவட்டங்களிலுள்ள பஸ்களை சர்க்காரே நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதாம்! தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக இன்று நம்பிக்கைத் துரோகம் செய்யப்படுகின்றது.

நாடாளுவோரின் இந்தப் போக்கு இந்தப் புத்தாண்டிலாவது மாறுமா?

("திராவிடன்" பொங்கல் மலரில்; 1967-க்கு முன் எழுதியது)

18. முதலாளித்துவத்தின்
முதுகெலும்பு முறிய...

முதலாளிக்குக் கிடைக்கும் இலாபம் அவர்கள் மேனி மினுக்குக்குப் பயன்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது!

காப்பாற்றுவதற்குப் போதுமானதைத் தவிர, மீதிப் பணத்தை வரிபோட்டு அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும்!

அப்படிச் செய்தால், முதலாளிகள் பெருகமாட்டார்கள்- அவர்களிடம் பொருளும் குவியாது; வரிபோட்டுஅவர்களிடம் இருந்து வாங்கும் பணத்தில் மக்களுக்கு