பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 55



அல்லது உள்ளபடியே பல்சக்கரத்தில் உள்ள ஒருபல் உடைபட்டு ஒரு விதமான சத்தம் வருவதைக் கண்டாலும், எப்படிப் பதை பதைத்துப்போய்-நடுநடுங்கிப்போய், அந்த இயந்திரத்தை உடனே சரிசெய்வாரோ-அதே போன்று தொழிலாளர்களில் யாராவது ஒருவர் எப்போதாவது சோர்வுற்றிருந்தாலோ-கவலை கொண்டிருந்தாலோ-நோய்வாய்ப் பட்டிருந்தாலோ-வாழ்க்கைத்தரம் குறைந்து கொடுமைக்கு ஆளாகியிருந்தாலோ-முதலாளிகளாக இருப்பவர்கள், உடனே அத்தொழிலாளியின் குறையைப் போக்கிட முன் வருதல் வேண்டும்-துயர் களைதல் வேண்டும்.

அதே போன்று, தொழிலாளர்களும் நன்கு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

இந்த நேச மனப்பான்மை இருவரிடையேயும் வளர வேண்டும்; அப்போதுதான் நாடு நலம் பெறும்; நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள்.

ஒவ்வொரு நிறுவனத்தின் முதலாளியும், தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றப் பாடுபட வேண்டும்!

இம்பீரியல் டுபாக்கோ கம்பெனியில் திறமைசாலிகளைத் தொழிலாளர்களாக வைத்துக் கொண்டுள்ளனர்; அவர்களது உழைப்பை மதிக்கின்ற வகையில் வீடுகட்டித் தந்துள்ளார்கள்; இது போன்ற குடியிருப்பு அமைத்துத் தந்து ஒவ்வொரு முதலாளியும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

20. சுதந்திரத்தின் காவலர்கள்
யார், யார்?

கொடி ஏற்றுபவர்-கோலாகல விழா நடத்துபவர்-விடுதலை வீரர்களைக் கொண்டாடுபவர்-இவர்கள் மட்டும் போதுமா அந்த இலட்சியம் நிறைவேற?