பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ♦ அறிஞர் அண்ணா



உச்சிப் பொது வந்தது கண்டும், சளைக்காமல் உழுது கொண்டிருக்கும் உழவன்-அவனும்.....

பல தொழில்களிலே ஈடுபட்டுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றானே. பாட்டாளி-அவனும்....

சிறார்க்கும் சிறுமியர்க்கும் அறிவுக் கண்களைத்திறந்து வைத்திடும் ஆசிரியர்கள் உள்ளனரே அவர்களும்....

நலிவு நீங்கிடத் தொண்டாற்றுகின்றனரே மருத்துவத் துறையினர்-அவர்களும்

காட்டு வெள்ளத்தை அடக்கி, நீர் வளம் கொண்டு, நிலவளம் பெருக்கி, ஊர் அமைத்துத் தருகின்றனரே, பொறியியல் துறையினர்-அவர்களும்..

நாட்டு நிர்வாகத்திற்கான பல்வேறு துறைகளிலே பணியாற்றுகின்றனரே அலுவலர்கள்-அவர்களும்... இவர்களின் திறமையிலும், செயலார்வத்திலும், வெற்றியிலும் தான் இருக்கிறது-சுதந்திரத்தின் சோபிதம்-விடுதலையின் விளைவு.

இவர்கள்தான் சுதந்திரத்தின். காவலர்கள்! அவர்களுக்கு என் வணக்கம்!

(சுதந்திர தினவிழா வானொலிச் சிறப்புரையில்)


21. பணிகள் ஆற்றவே பதவி

தொழில்கள் எப்படி வளம் பெறும் என்பது, நாட்டிலே அமுலாக இருக்கும் அய்ந்தாண்டுத் திட்டத்தைப் பொறுத்தது; ஆனால் அய்ந்தாண்டுத் திட்டம் எப்படி அமையுமென்பது மத்திய அரசிடம் இருக்கின்றது.

மத்திய அரசிடம் போராடி-வாதாடித்தான் திட்டங்களைப் பெற வேண்டுமானால், நாங்கள் அதற்குத் தயாராய் இருக்கிறோம்!