பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 59 அவன், அமைத்த பாதைகள் பலப் பல! அவன், வெட்டிய திருக்குளம் பலப் பல! அவன் கட்டிய கோட்டைகள் பலப் பல! அவன், ஆக்கித் தந்ததே அனைத்துப் பொருள்களும்! அவன், படைப்புத் தொழிலில் வல்லவன்! அவன் பழிபாவத்துக்கு அஞ்சாதாரிடம் யானான்! பகடை அவன், உழைக்கிறான்; உருக்குலைந்து போகிறான்! அவன், உழுகிறான்; மற்றவர் உல்லாச புரியில் உலவு கிறார்கள்! அவன். அறுத்துக் குவிக்கிறான்; மற்றவர் அள்ளிச் செல்கிறார்கள்! அவன், ஏழ்மையில் உழல்கிறான்; எல்லாச் செல்வத்தையும் ஆக்கி அளித்து விட்டு! அவன் ஆடை அணி தேடிடவில்லை; ஆடம்பரம் நாடிடவில்லை! அவன், மேனி அழகு கூடிட, புனைவனவும் பூசுவனவும் தேடிடவில்லை! அவன், உழைக்கிறான், உழைக்கிறான், உழைக்கத் தானே பிறந்தோம் என்ற உணர்வுடன் அவன், தன்னைச் சுற்றி சீமானும் பூமானும் உலவிடக் காண்கிறான்; இவர்கள் இந்நிலை பெற்றது எதனால் என்று கேட்டிட முனைகின்றான் இல்லை! அவன், கண் எதிரே மணி மாடங்கள் தெரிகின்றன; நமக்கு மண் குடிசைதானா? என்று கேட்டிடத் தோன்றவில்லை அவன், உழைப்பால் உலகை வாழ வைத்திடும். உத்தமன்! அவன், உழவன்! அவன், பாட்டாளி! அவன், ஏழை!