பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 61 கந்தனா! கிடாமாடும் அவனும் ஒன்றுதானே!- என்று கேலி பேசி வந்த கனவான், "உழைப்பின் பெருமை" பற்றி அவனிடம் பேசுகிறான்! உலகம் உய்வதே உழைப்போனால்தான் என்று பாராட்டுகிறான். ஏழை, திகைக்கிறான்; இதென்ன என்றும் கேளாத பேச்சாக இருக்கிறதே என்று! தமிழக அரசு, பொங்கற் புதுநாளை, உழவர் திருநாளாகக் கொண்டாட ஏற்பாடு செய்வது பொதுவாக ஏற்பட்டுள்ள புதிய போக்கின் ஒரு பகுதியேயாகும். உழைப்போரின் உள்ளம் எரிமலையாகி வெடித்திடாதபடி தடுத்திட, தடவிக் கொடுத்திடும் ஓர் முயற்சி! பாட்டாளி கள் உள்ளத்திலே பகை உணர்ச்சி மூண்டெழுகிறது என்று கண்டு கொண்டவர்கள், பாகு மொழி பேசி மயக்கிட எடுத்துக் கொள்ளும் முயற்சி! அவன் ஏழை! ஆனால் அவன் எங்கும் இருக்கிறான்! ஆகவே அவனைப் பகைத்தொழிக்க முடியாது; மயக்கிட முடியும் என்று எண்ணுகின்றனர், அவன் உழைப்பை உண்டு பெருத்திட்ட உல்லாசபுரியினர். அவனை மிதித்துத் துவைத்துவந்த நாள் போய், மதித்து மகிழச் செய்திட முயற்சி மேற்கொள்ளப்படும் நாள் வந்திருப்பது, வரவேற்கத்தக்க ஒரு கட்டம்; அஃது போலிகள் நடாத்திடும் நாடகமாக இருந்திடும் நிலையிலேயும், ஏழையைப் புறக்கணித்தபடி இனி இருந்திட முடியாது என்ற எண்ணம் இடம் பெற்றுவிட்டதனை இந்தக் கட்டம் தெளிவாக்கிக் காட்டுகிறது. இந்தக் கட்டம், இறுதிக் கட்டமல்ல! ஆனால் இந்தக் கட்டம் காணவே, நீண்ட பயணம் நடாத்த வேண்டி இருந்தது; இன்னல் பல ஏற்கவேண்டி வந்தது. அவன் ஏழை! ஆமாம்! வேறே எப்படி இருக்க முடியும்! என்ன தெரியும் அவனுக்கு! உழைக்கத் தெரியும் மாடுபோல சுமக்கத் தெரியும்; கல்லைப் பிளக்கத் தெரியும்; கட்டை வெட்டத் தெரியும்; குப்பை கூட்டத் தெரியும்;