பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அறிஞர் அண்ணா வேறென்ன தெரியும்! அறிவின் துணைகொண்டு செய்திட வேண்டிய பல செயல்கள் உள்ளன; அவன் என்ன கண்டான் அவைபற்றி! அவனுக்கு ஏது அதற்கான தெளிவு பயிற்சி! அவன் பாவம், ஏழை, என்று பரிதாபம் கலந்த ஏளனப் பேச்சு நடத்திவந்தனர் சீமான்கள் ! நளினிகள் அந்தப் பேச்சு கேட்டு 'கலகல'வெனச் சிரித்தனர்! அவன் ஏழை! உழைக்கிறான்; அவனும் பிழைத்திருக்க வேண்டாமா! அவன் ஏழை, ஆனாலும் நமது உடைமை அல்லவா? அவன் உயிருடன், உடல் வலிவுடன் இருந்தால்தானே, உழைக்க முடியும்! அதனால் அவன் வாழ வழி செய்து தரவேண்டியது நமது கடமை'! அவன் உடல் நலம் கெடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியதும் நமது கடமை ! அவன் ஒரு நாலு நாள் படுத்துவிட்டாலோ, அல்லது ஒரே அடியாகக் கண்ணை மூடிவிட்டாலோ, யாருக்கு நட்டம்? நமக்குத்தானே? ஆகவே அவனைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை! இந்த விதமான 'வியாபாரப் போக்கிலே பேசி வந்த கட்டம் பிறகு! இப்போது வந்துள்ள கட்டம் அவன் உழைக்கிறான். ஆனால் இப்போது உண்மையையும் உணரத் தலைப்பட்டு விட்டான்; நம்மாலன்றோ உலகு என்று பேசுகிறான், மெல்லிய குரலில்! நான் இல்லையேல் இங்கு வேறு எதுவும் இல்லை என்று முணுமுணுக்கிறான். ஆகவே அவனை இனியும் புறக்கணிக்கக் கூடாது; அவன் பகையைத் தேடிக் கொள்ளக் கூடாது, பசப்பிட வேண்டும், மயக்கிட வேண்டும் என்ற திட்டம் போட்டிட வேண்டியதாகி விட்டது. உழைப்பவனே உத்தமன்! உழைப்பே செல்வம் உழைப்புக்கே எல்லாப் பெருமையும்! உலகம் இயங்குவதே உழைப்பினால்தான்!- என்ற திருப்புகழ் பாடுகின்றனர். நமது பெருமை இத்தகையதா? நாம் உழைத்திடுவது கண்டு நம்மை இவ்வளவு உயர்வாகப் பேசுகின்றனரா?