பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 63 - மேலும் உழைத்திடின், மேலும் போற்றுவர், வாழ்த்துவர்! என்று பாட்டாளி எண்ணிக்கொள்வான்; மனதிலே எழுப்பிய குமுறலும் அடங்கிப்போகும்; கணக்குப் பார்க்கமாட்டான்; கணக்கு கேட்கவும் மாட்டான்; காலத்தை நமதாக்கிக் கொள்வோம். இரண்டொரு கற்கண்டுத் துண்டுகளை வீசிவிட்டால் போதும் என்று எண்ணி, தன்னலக்காரர் திட்டம் திட்டியுள்ளனர். அந்தக் கட்டம் இது! கேள்வி ஏதும் கேட்காதிருந்து வந்த ஏழை, இப்போது, எதனால் கேள்வி கேட்கத் தொடங்கினான். ஓயாது உழைத்தும், வாழ முடியாத நிலைபெற்று, கஷ்டப்பட்ட போது, எண்ணம் மனதினைக் கிளறத் தொடங்கிற்று. பசுமையைத் தந்தவன், தன் வாழ்வு வரண்டுபோகக் கண்டபோது, உலகுக்குப் பணம் தேடித் தந்திடும் நம்மாலே நமது வாழ்விலே வரட்சி ஏற்பட ஒட்டாது தடுத்திட முடியாது போய்விட்ட காரணம் என்ன? என்று கேட்கத் தொடங்கினான். அதன் தொடர்பாக, அடுக்கடுக்கான கேள்விகள் கிளம்பின! அதிர்ச்சி தரத்தக்க பதில்கள் கிடைத்தன. கனியின் சுவையை மலரின் மணத்தை, பூங்காற்றின் நேர்த்தியை இசையின் இனிமையை நாம் கண்டு மகிழ்ந்திட முடியவில்லை...ஆனால்...என்று எண்ணிடலானான். அவன் மனம் எங்கெங்கோ சென்றது பெருமூச்சு கிளம்பிற்று? ஓர் கடுமை நிரம்பிய பார்வை கண்களிலிருந்து புறப்படலா யிற்று! உழைப்பே செல்வம்! உழைப்பின் பெருமையே பெருமை!- என்று விழா நடத்திப் பேசிடின் ஏழை 'இது போதும்' என்று இருந்து விடுவானா? உழைப்பே செல்வம்! ஒப்புக் கொள்கிறாய். ஆனால் அந்தச் செல்வம் உழைப்பவனிடம் இல்லையே ஏன்? உழைக்காதவனிடம் போய்க்குவிகிறதே ஏன்? என்று எண்ணிடுவன்! அந்த எண்ணம் ஆபத்தான எண்ணம்