பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 * அறிஞர் அண்ணா என்பர் ஆதிக்கக்காரர்கள்! வந்து தீரவேண்டிய எண்ணம் என்பர் வரலாறு அறிந்தவர் அந்த எண்ணத்தைத்தான், மெள்ள மெள்ள ஆனால் நிச்சயமாக, ஏழையை மயக்கிடும் நினைப்புடன் விழா நடத்துவோர் ஊட்டிவிடப் போகின்றனர் தம்மையும் அறியாமல். உழைப்பின் பெருமை பற்றி இத்தனை உருக்கத்துடன் பேசுகின்றனரே, விழா நடத்துவோர்-விவரம் தெரிந்தவர் அல்லரோ அவர்கள்-ஆயின் உழைப்போன் பெற்றுள்ள பெருமை என்ன, இன்று? பெருமைதரும் இடமா, சமூகத்தில் இருக்கிறது உழைப்போனுக்கு? பெருமைக்குரிய உழைப்போனுக்கா ஊராளும் மன்றங்களில் இடம் இருக்கிறது? உழைப்பே பெருமை என்று பேசுபவர், உழைக்கவா முன் வருகின்றனர்? பேசுகின்றனர்! உழைப்பின் பெருமையை அவர்கள் உணர்ந்து உரைப்பவரெனில், உழைப்பவன் உருக்குலைந்து கிடக்கிறானே, அவனுக்காக என்ன செய்தனர்? உடைமையும் உல்லாசமும் சீமான்களிடம்! உழைப்பு எம்மிடம்! எமக்கென்று அவர்கள்விட்டு வைத்துள்ள ஒரே உடைமை, உழைப்பின் பெருமை என்று பேசுகிறார்களே அந்தப் 'பெருமை' மட்டுந்தானே! நியாயமா இது!- என்று கேட்கவைக்கவே விழா பயன்படும்; உடனடியாக இல்லையெனினும் மெள்ள மெள்ள உழைப்பின் பெருமையை உணர்ந்துள்ள பெரியவர்களே! உழைத்திட வாரீர்!-அந்தப் பெருமையிலே பங்கேற்க வாரீர் என்று ஒருவன், கேலிக் குரலில் அழைப்பு விடுத்திடுவான்!