பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 65



உழைப்புதானே, ஐயன்மீர்! பெருமை தருவது! அங்ஙனமிருக்க, உண்டு கொழுத்து உருண்டு கிடக்கின்றீரே, பிறர் உடைமையைக் கவர்ந்திட வழிதேடி அலைகின்றீரே! ஏன்? வந்து உழைத்திடுவீர்! பெருமை பெறுவீர்' என்றொருவன் கேட்டுவிட்டு, புன்னகை உதிர்த்திடுவான்.

உழைப்பின் பெருமைபற்றித் தானே ஐயா பேசுகிறீர்! உண்மை ஐயா! உண்மை! பெருமை நீரம்பத்தான் இருக்கிறது. பட்ட கடனைத் தீர்த்திட வக்கற்று' பதுங்கிப் பதுங்கிச் செல்கிறாயே, நீயும் ஒரு மனிதனா? என்று பக்கிரி கேட்டான். பத்துப்பேர் எதிரில், பட்டப்பகலில், நடுத்தெருவில்! அந்தப் 'பெருமை'யை நான் பெற்றேன்! உழைத்துத்தான் பெற்றேன் அந்தப் பெருமையை!

உழைப்பின் பெருமை எத்தகையது என்பது புரிந்ததய்யா எனக்கு: என் மனைவிக்குக் குலைநோய்; மருந்து பெறச் சென்றேன்; சர்க்காரின் மருத்துவ மனையில்; உழைப்பால் கிடைக்கும் பெருமையைத் தேடிப் பெற்றிடத் தெரியாத உடைமையாளன் ஒருவனுடைய மூன்றாந் தாரம், முத்துப் பல்லழகி வந்தாள், முதுகுப்புறம் அரிப்பு என்றாள்; மூன்று டாக்டர்கள் அந்த மருத்துவ மனையில்; மூவரும் சென்றுவிட்டனர் பெண்மையின் கட்டளைக்கு நடுங்கி. கால் கடுக்க நின்றேன்; கண்ணால் சொன்னான் காவலாளி போகச் சொல்லி; மறுத்தேன்; பிடரியைப் பிடித்து வெளியே தள்ளினான். டாக்டரய்யாவைத் தொந்தரவு செய்யாதே என்று. பெருமை ஐயா! பெருமை! உழைப்பால் வந்த பெருமை! - என்றொருவன் உருக்கத்துடன் பேசிடப் புறப்படுவான்.

வைரம்! வைரம்! அருமையான வைரம்! மணங்கு 25 ரூபாய் வாங்கிட முந்துங்கள்! அருமையான வைரம்!- என்று எங்காவது கூறிடுவாரா ! இங்கு கூவுகின்றனர்! உழைப்பு! உழைப்பு! பெருமைமிக்கது பெருமைமிக்கது! உழைத்திடுவீர்கள்! நாளெல்லாம் உழைத்திடின் நாலணா கூலி! நல்லோரே! வல்லோரோ! உழைத்திடுவீர், பெருமை

2.6.