பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ♦ அறிஞர் அண்ணா



உண்மையான உழவர் திருநாள்; உழுபவனுக்கு நிலம் கிடைத்திடும் நாளே!

நேர்மையான உழவர் திருநாள் நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டச் சொட்டப் பாடுபடும் உழவன் வாழ்வில் நிம்மதி ஏற்படும் நாளேயாகும்!

அந்நாளே, திருநாள்; பொன்னாள்; உழைப்போர் உண்மையான பெருமையினைப் பெற்றிடும் நன்னாள்.

அந்நாளைக் கண்டிடவே கழகம் விழைகிறது.

அதற்காகப் பாடுபடும் ஆற்றலைப் பெற்றிடவே பணியாற்றி வருகிறது.

அதற்காவன செய்திடவே மக்களின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.

23. மார்க்கசீயம் பற்றி அண்ணா

"கம்யூனிஸ்டுகள், இங்கு, காரல் மார்க்ஸ் - அவர் காலத்திலிருந்த நிலைகளை வைத்துக்கொண்டு கூறியவர்க்கப் போராட்டத் தத்துவத்தைப் பேசினார்கள் பேசுகிறார்கள்.

நாட்டிலே காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்த மக்கள், நாட்டு மக்களாக - நாகரிகமான வாழ்வு பெற்றவர்களாக

ஒரு சமுதாயமாக வாழத் தலைப்பட்டுத் தொழில் வளர்ச்சியும் தோன்றிய காலத்தில், சமுதாயம் இரு கூறுகளாகப் பிளவுபட்டது; முதலாளிச் சமூகம் - பாட்டாளிச் சமூகம் என்ற கூறுகள் தோன்றின!

இந்த நிலையை, தனக்கிருந்த பரந்த அறிவினால் உணர்ந்த காரல் மார்க்ஸ் 'எதிர்காலத்தில் இந்த இரண்டு வர்க்கங்களும் மோதிக்கொள்ளும். முடிவு, தொழிலாளி வர்க்கத்திற்கு வெற்றியே' என்று கூறினார்.

அவர் கூறிய காலத்தில், சமுதாயம் ஏறத்தாழ இந்த இரண்டு கூறுகளாகவே இருந்தது; ஆனால், இப்போது அந்த