பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 69 நிலையில் இல்லை; இந்த இரண்டு கூறுகளுக்கிடையில் ஒரு வர்க்கம் - நடுத்தர வகுப்பு தோன்றியுள்ளது. ஆனால் கம்யூனிஸ்டுகள் இன்னும் இந்த இரண்டு சமுதாயங்களைப் பற்றி மட்டுமே எண்ணுகிறவர்களாக இருக்கிறார்கள். பாட்டாளி வர்க்கத்தைக் கொண்டு மட்டுமே முதலாளி சமூகத்தை ஒழித்துவிடலாம் என்கிறார்கள்; ஆனால் நாம், 'இந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையில் உள்ள நடுத்தர வகுப்பினர், முதலாளி பக்கம் இழுக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று கூறுகிறோம். இந்த நடுத்தர வகுப்பினர், அச்சத்திற்கும் ஆசைக்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்ப வர்கள்! 'நிலை தாழ்ந்தால், எங்கே பாட்டாளியாகி விடுவோமோ' என்ற அச்சமும், ஒரு 'சான்ஸ்' கிடைத்தால் 'முதலாளி ஆகமாட்டோமா' என்ற ஆசையும் அவர்களைப் பிடித்தாட்டுகிறது இந்த நடுத்தர வகுப்பினர் இன்று, பல ஐரோப்பிய நாடுகளில் ஆளும் கட்சியை அமைத்திருக்கின்றனர்! அமெரிக்காவில் முதலாளிமார்கள் ஆட்சி நடத்துகிறார்கள்; இரஷ்யாவில் தொழிலாளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்; ஆனால் வேறு ஐரோப்பிய நாடுகளில் மத்திய தர வகுப்பார் ஆளும் கட்சியினராக உள்ளனர்! இந்த நாட்டிலும் நடுத்தர வகுப்பார் இருக்கின்றனர்; இழுக்கப்படாமலிருந்தால்தான், தொழிலாளர்கள் விரும்புகிற ஒரு அரசு அமைய முடியும். 'நடுத்தர வகுப்பாரே இல்லை' என்றோ, அல்லது, 'அவர்கள் ஒரு சக்தியே அல்ல' என்றோ கூறப்படுமானால், இந்நேரம் இந்த நாட்டில் புரட்சி மூண்டிருக்க வேண்டும்; முதலாளி சமூகம் சாய்ந்திருக்க வேண்டும்; பாட்டாளி