பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அறிஞர் அண்ணா மலர்ந்திருக்க வேண்டும்; இல்லையே-ஏற்பட அரசு வில்லையே! அதனால்தான் நாம் கூறுகிறோம் - தொழிலாளர் களுக்கும் நடுத்தர வகுப்பாருக்கும் இடையே ஒரு அன்புச் சங்கிலித் தொடர்பு வேண்டும்' என்று! தொழிலாளருக்கு நியாயம் கிடைக்க வேண்டு மென்பதை நடுத்தர வகுப்பாருக்குச் சொல்ல, அவர்கள் தொழிலாளருக்கு விரோதமாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அப்படி நடுத்தர வகுப்பார் தயாரிக்கப் பட வேண்டும். அப்போதுதான், தம்மையும் அறியாமல் நடுத்தர வகுப்பார் முதலாளி பக்கம் இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க முடியும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், கடையில் சில சாமான்களை வாங்கி - அதை ஒரு கூலிக்காரன் தலையில் வைத்து வீட்டிற்கு வந்து நாம் ஆறணா கூலி கொடுப்பதாயும், அந்தத் தொழிலாளி இன்னும் இரண்டணா கூடக் கேட்பதாயும் வைத்துக் கொள்வோம்; உடனே நமது தாயார் கூறுகிறார்கள் 'இந்தக் கூலிக்காரர்களே இப்படி'த் தான் என்று! இதுதான், 'நம்மையும் அறியாமல், நடுத்தர வகுப்பார் முதலாளி பக்கம் இழுத்துச் செல்லப்படுகிறார்கள்' என்பது இரயில்வேத் தொழிலாளர்கள் ஏழெட்டு ஆண்டு களுக்குமுன் ஒரு வேலை நிறுத்தம் செய்தனர்; அந்த வேலை நிறுத்தத்தைத் திறம்பட நடத்த கம்யூனிஸ்டுகள் இல்லாமற் போகவில்லை; வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எத்தகு அடக்குமுறைகளையும் தாங்கிக் கொள்ளும் உள்ள உரம் இல்லாமற் போகவில்லை; அதற்கு ஆதரவாக நாம் துணை நிற்காமல் போகவில்லை! நாம் என்றால்- அன்று திராவிட கழகமாக இருந்தோம். பெரியார் கூட, 'ஆதரவு தரவேண்டாம்'