பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி . 73 சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம்! சாதிப்பது கடினம்! வெளியே நின்று வேதனைப்படும் நிலை ஏன்? - "கடற்கரையில் அதுல்யா கோஷூம் காமராசரும் பேசியதாகப் பத்திரிகையில் செய்தி வந்தது; 'உழுபவனுக்கே நிலம் - தொழிலாளிக்குத்தான் ஆலை' என்ற அதுல்யா கோஷ் பேசினாராம். "உழுபவனுக்கு நிலம் என்றால், பட்டாக்காரரிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் எப்படி வந்தது? வலிவலத்தாரிடம் ஏராளமான நிலம் இருக்கக் காரணம் என்ன? குன்னியூர் சாம்பசிவம் எப்படி இவ்வளவு நிலங்களைப் பெற்றார்? "உழுபவனுக்கு நிலம்' என்றால், உழுபவர்களுக்கு அல்லவா நிலம் சொந்தமாகி இருக்க வேண்டும்? "தொழில் செய்யும் தொழிலாளிக்கும் ஆலையில் பங்கு' என்றால், இங்கு ஆலைகள் நெடுங்காலமாக மூடிக் கிடப்பானேன்? உள்ளே இருந்து வேலை செய்ய வேண்டிய வர்கள், வெளியே நின்று வேதனைப்படுவானேன்? அறிஞர் அண்ணா (1966ல், கோவை-நரசிம்மாபுரத்தில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆற்றிய உரையில் 24. ஏழையின் புரட்சி மன்னர்கள் மணிமுடிகளுக்காகவும், சீமான்கள் மது நிகர் வாழ்வுக்காகவும் போரிட்ட பகுதிகளே பெரிதும் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன! ஏழை எளியவருக்கு எங்ஙனம் உலகிலே ஒதுக்கிடம் தரப்படுகிறதோ, அது போன்றே வரலாறும், அவர்களை அதிகம் கவனிப்பதில்லை?