பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ♦ அறிஞர் அண்ணா



மாவீரர் ஜூலியஸ் சீசரின் வீரவாளின் ஒளி ஏழையின் அழுகுரலை அடக்கிவிட்ட வரலாறு தன் வழக்கமான பகுதியைக் காட்டி--மக்களின் வரலாற்றை மறைத்துவிடும்.

அடிமைகளாக--பண்ணையாட்களாக--பலவித தொழில் செய்பவர்களாக-மக்களில் பெரும்பகுதியினர் இருந்த வரையில்-அவர்கள் எப்போது கொடுமையை எதிர்க்கக் கிளம்பிலும்--கொள்கை, திட்டம், கூடிச் செயலாற்றுதல், தொடர்ந்து செயலாற்றுதல் போன்ற முறையைக் கொள்ளவில்லை!

ஊருக்குள் புகுந்த புலியைக் கொல்ல அனைவரும் கையில் கிடப்பதை எடுத்துக்கொண்டு கிளம்புவது போலவே காரியம் இருந்து வந்தது!

தங்களின் நிலை பற்றி எண்ணிப் பார்த்திட--எம்முறையினால் குறைகளைக் களைந்து கொள்ளலாம்--என்று கூடிக் கலந்து பேசி--அதற்கான திட்டத்தை யார் வகுப்பது--யார் திட்டப்படி செயல் நடத்திச் செல்வது? என்பன போன்றவைகளை ஆராய்ந்து முடிவு கட்டத் திறனும், வாய்ப்பும் அப்போது இல்லை! திறத்தை விட வாய்ப்பு இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் ஏழையின் எழுச்சியில் என்றுமே ஒரு வலிவு இருக்கத்தான் செய்தது!

இந்த முறை ஏழைகளுக்குக் கிடைக்க பல நூற்றாண்டுகள் பிடித்தன. இதற்கிடையில் நாடுகளிலே - பல துறைகளிலும், பல்வேறு மாற்றங்கள் நேரிட்டன; வரலாற்று ஆசிரியர்களின் கண்களுக்கு மக்கள் தெரியலாயினர்!

கொடுங்கோலனை விரட்டுவது--செங்கோல் அமைப்பது--' எவன் எந்த நேரத்தில் கொடுங்கோலனாகி விடுவானோ' என்ற அச்சத்தால் உந்தப்பட்டு அரசாளும் முறையிலேயே மாற்றம் காண்பது-கோனாட்சியை குடி கோனாட்சியாக மாற்றுவது--ஆட்சி செய்வோருக்கும்--