பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி + 77 ஆளப்படுவோருக்கும் இடையே தொடர்பு இருக்க வழி வகை காண்பது போன்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பிறகு மக்களின் பிரச்சினை பற்றிக் கவனிக்கும் சுற்றுச் சார்பும் உருவாயிற்று. ஆட்சி முறையிலே மட்டுமல்ல-அர்ச்சகர் முறையி லேயும் திடுக்கிடத்தக்க பல மாற்றங்கள் தேவைப்பட்டன; இந்த மாற்றங்கள் இரத்தம் சிந்திப் பெறப்பட்டன. ஒவ்வொரு மாற்றமும் ஏற்படும்போதும் - கழனியில் உழைப்பவனும்--கல் உடைப்பவனும்-உடலை வாட்டும் வேலை செய்து பிழைப்போனும் 'இனி நமக்கு நல்ல காலம் பிறக்கும்; தொல்லை குறையும்; நலன் கிடைக்கும்' 'என்று தான் எண்ணிக் கொண்டார்கள். ஆனால் நாட்டுக்கும் நாயகராக யார் வந்தாலும் -அரசாளும் முறையிலே என்னென்ன மாறுபாடுகள் ஏற்படினும் - ஏழையின் வாழ்விலே ஒரு புது மலர்ச்சி ஏற்படவில்லை! - ஏக்கம் அவன் தூக்கத்தைக் கெடுத்துதான் வந்தது; உழைப்பு அவன் உடலையும் உள்ளத்தையும் துளைக்கத்தான் செய்தது. அவன், பாதி மனிதனாகத்தான் இருந்தான், இருள் நீங்கவில்லை. சிற்சில சமயங்களில் இருளிலே ஒளிதரும் சம்பவம் தோன்றும். மறையும்; ஒளிதர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் படைத்தவர் ஓரிருவர் முன்வருவர்; அவர்களால் இருளை அடியோடு விரட்ட முடியவில்லை; ஆனால் இருளிலே ஒளி விழச் செய்தனர்! 'ஒளி நிரம்பிய இடமானால் இன்பம் எத்தனை இருக்கும்" என்று மக்களை எண்ணிடச் செய்தனர்! அவர்களின் பணி மக்கள் வரலாற்றிலே மாண்புள்ள பகுதியாகும். இராபர்ட் ஓவன் இங்கிலாந்து நாட்டில் இது போல், இருளிவே ஒளி காட்ட முயன்ற இராபர்ட் ஓவன் என்பவரின் சீரிய முயற்சி, மக்கள் வரலாற்றிலே சிறப்பளிக்கும் பகுதியாகும்! வேறு பல நாடுகளைப் போலவே இங்கிலாந்தும், மன்னர்களின் கோலாகலத்துக்கு உறைவிடமாகத்தான்