பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அறிஞர் அண்ணா இருந்தது; ஆனால் அரசியல் முறைகளை மாற்றி யமைக்கும் உரிமைப் போரைத் திறம்பட நடத்தி வெற்றி கண்டனர். 'மன்னர் என்றால் மக்களுக்காக ஆட்சி செய்யும் மகத்தான பொறுப்பைத் தாங்க நிற்கும் சின்னம்' என்ற கொள்கை உருவாகியது. நாடு எக்கேடு கெட்டாலும் கவலைப்படாமல், அரண்மனையில் அட்டகாசம் செய்து வந்த மன்னர்கள்- அண்ணன் தலையை வெட்டி மணிமுடியைப் பறித்துக் கொண்ட முடிதாங்கிகள் --அகப்பட்ட அணங்குகளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவள் அளிக்கும் இன்பத்தில் சுவை குறைந்ததும்-தலையைச் சீவிவிட்டு - வேறோர் தத்தையை நாடியவர்கள்-பிரபுக்களுடன் கூடிக் கொண்டு கொட்டமடித்தவர்கள் - அவர்களையும் பகைத்துக் கொண்டு உள் நாட்டுப் போர் நடத்தியவர்கள்- மதத் தலைவர்களின் ஆசியே ஆட்சிக்கு அரண்' என எண்ணியவர்கள்-'எமக்கு அவர்கள் ஈடா' என்று எதிர்த்துக் கேட்டவர்கள் - காரணமற்ற போர் புரிந்தவர்கள்- தலைதெறிக்கத் தோற்றோடி வந்தவர்கள்- நல்லவர்கள்- கெட்டவர்கள் - நயவஞ்சகர்கள் - எனும் எல்லாவகை அரசர்களையும், பல்வேறு அரசமுறைகளையும் நாடு பார்த்தாகி விட்டது. புயல் கிளம்பி, நச்சு மரங்களைச் சாய்த்தன; புதிய நச்சுச் செடிகள் முளைத்திடா வண்ணம், அரசியல் உழவு முறையில் புதிய மாற்றம் காண முயன்றனர்! இந்த நிலையில் நாடு இருந்த போது, மக்களின் வாழ் விலே இருந்து வந்த இருளைப் போக்கும் சீரிய முயற்சியை "இராபர்ட் ஓவன்" செய்ய முற்பட்டார்! இராபர்ட் ஓவன் 1771-ம் ஆண்டு பிறந்தார்; 87 ஆண்டு காலம் வாழ்ந்தார்; இருளில் ஒளி காட்டும் சீரிய முயற்சியில் ஈடுபட்டார்-தோற்றார்! அந்தத் தோல்வி மக்கள் வரலாற்றிலே புதிய மாண்பு அளிக்கும் வலிவைத் தந்தது!