பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி . 81 கைத் தொழில்முறை இருந்தபோது கருவிகளைத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களே தொழில் செய்ய முடிந்தது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் - குறைந்த கூலி கொடுத்தால் போதுமானதாக இருந்தது; எனவே, தொழில் அதிபர்கள், 'இது கொடுமை' என்று எண்ணாமல் குழந்தைகளைக் கடுமையாக வேலை வாங்கினர்; 'பெட்டியில் லாபம் சேர்ந்தால் போதும்' என்பதன்றி, வேறு அக்கறை அவர்களுக்கு இருக்க முடியும்? நூல் நூற்கும் இயந்திரம்-நீராவி விசை இயந்திரம் முருக்கேற்றும் இயந்திரம் போன்ற பல நூதனக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு, தொழில் தரத்தையும் உற்பத்திப் பெருக்கத்தையும் அதிகமாக்கினர். இந்த இயந்திரங்களைக் கண்டு பிடித்தவர்கள்- பெரும்பாலும் - ஏழையின் உலகினரே! இலட்சக் கணக்கில் பணம் செலவிட்டு எந்தச் சீமானும் கண்டுபிடித்ததும் அல்ல! பாட்டாளியின் உடலிலே கொட்டும் வியர்வை கண்டு கண்ணீர் சொரிந்தவர்கள். 'அவனுடைய சிரமத்தைக் குறைக்கக் கருவிகள் பயன் படாதா என்ற நல்லெண்ணத்தினாலும், மொத்தத்தில், 'உற்பத்தி பெருகிச் செல்வம் வளர்ந்தால் பாடுபடுபவனுக்கு நலம் கிடைக்கும் என்ற நோக்குடனும், இயந்திரங்களைக் கண்டு பிடித்தனர்; ஆனால். அதனைக் கொண்டு பாட்டாளிகளை மேலும் கசக்கவே முதலாளிகள் முனைந்தனர்! படிப்பு இல்லை! ஏழைக் குடும்பம்; பதின்மூன்று குழந்தைகள் உள்ள குடும்பம்; அதிலே பிறந்த ரிக்கார்டு ஆக்ரைட் கண்டுபிடித்து தான் நூட்பு இயந்திரம்! கையால் நூற்பதைவிட, நேர்த்தியாகவும்- அதிக அளவிலும் நூற்கக் கூடிய இயந்திரம்! கைத் தொழிலிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாட்டாளியின் வியர்வையைக் கண்டு, ஆக்ரைட் மனம் 27.