பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மா இணக்கமில்லாவனோடு . என்ன வாது? இணங்காரோ டிணங்குவது, இகழ்ச்சி. இண்ணற்று. இண்ணு போகிறதா? இதினாலே. இரட்டைக்கொக்கி மாட்டுவாயோ? இதுவு மதுவு மடி. இன்னு மொண்ணு மடி! இதென்ன, வெள்ளரிக்காய் விற்ற பட்டணமா? இத்தனை அத்தனையானால், அத்தனை எத்தனை ஆகாது. இத்தனை பெரியவன் கையைப் பிடித்தால் , எப்படி மாட்டோ மென் கிறது? இத்தனை பேர் பெண்டுகளில், என் பிள்ளைக்கொரு தாயில்லையா? இந்தக் கண்ணில் புகுந்து, அந்தக் கண்ணில் புறப்படுகிறாள். இந்தக் கூழுக்கா, இருபத்தெட்டு நாமம்? இந்தச் சிற்றுண்டி, எனக்குத் தெவிட்டிப் போயிற்று இந்தப் பூனையும், பால் குடிக்கமா? இந்தப்பெருமையையும் பந்தலழகையும், பார்த்தையா பண்ணக் காரா? இந்த வளைவு சிக்கினால், எப்படி தான் பிள்ளைபிழைக்கும். இந்திரனைச் சந்திரகன யிலையாலே மறைப்பாள். எமதர்மராஜனக் கையாலே மறைப்பாள். இந்திராதி தேவர்க்கும். வந்திடுந் தீவினை . இந்திரைக்கு முத்தாள், மூதேவி. இப்பெரியக் கொள்ளையிலே, அப்பாவென் கப் பிள்ளையில்லை! இம்மிய நுண்பொருள்க ளீட்டி நிதியாக்கி, கம்மியரு மூவர் களிறு. இயற்கை வாசனையோ, செயற்கை வாசனையோ ? இரக்கப் போனாலும், சிறக்கப்போகவேனும். இரக்கமில்லாதான் நெஞ்சு, இரும்பிலுங் கொடியது. இரசவாதிக்கு, ஏது பஞ்சம்? இரண்டு ஆட்டில், கட்டின. குட்டியானான். இரண்டு ஓடத்தில், கால்வைத்தவனைப் போலிருக்கிறன். இரண்டு நாய்க்கு. ஒரு எலும்பு போட்டாற்போலே. இரண்டு பட்ட ஊரில, குரங்குங் குடியிராது. இரண்டு பெண்சாதிக்காரனுக்கு, கொண்டை யென்னத்திற்கு? 31