பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாம் பேறு பெண் பிறந்தால், எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர். எட்டிக் குட்டி, இரங்கிக் காலைப் பிடித்துக்கொள்ளுகிறது. எட்டி பழுத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன? எட்டிப் பார்த்தாப்போலே, கொட்டிக்கொண்டு போகிறன். எட்டி மரமானாலும், பச்சென் றிருக்கவேண்டும். எட்டியுடனே சேர்ந்த, இலவுந் தீப்பட்டது. எட்டினமட்டும் வெட்டும் கத்தி, எட்டாத மட்டும் வெட்டும் பணம். எட்டினால், சிகையைப்பிடி : எட்டா விட்டால், காலைப்பிடி. எட்டுகுஞ்சு அடித்தாலும், சட்டிக்கறி யாகாது. எட்டுச் சிந்தாத்திரை, ஒரு தட்டுதலுக் கொக்கும். எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை மூழ்கில், தப்பாமற்றலை போம். எட்டும் இரண்டும் தெரியாத, ஏழை. எட்டு வருஷத்து எருமைக்கடா, ஏரிக்குப் போக வழி தேடுகிறது. எண்சாணுடம்பிலே, எள்ளத்தனை இரத்தமில்லே. எண்சாணுடம்புக்கும். சிரசே பிரதானம். எண்சாணுடம்பும், ஒரு சாணாய்க்குண்ணி யாசிக்க வேண்டும். எண்ணமெல்லாம் பொய், எமனோலை மெய். எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும், பெண் புத்தி பின்புத்தி. எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமற் செய்கிறவன் மட்டி . எண்ணித் துணிவது கருமம். துணிந்தபின் எண்ணுவ திழுக்கு. எண்ணி முடியாது. ஏட்டில் அடங்காது. எண்ணிய எண்ணம் என்னடி (நீ என்னை) அண்ணாவென்று அழைத்தமுறை என்னடி. எண்ணினேன் கோடி, இழப்ப தறியாமல். எண்ணு கூடியும், திருமுல்லை வாடியான் ஆத்தோடே.