பக்கம்:ஊசிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவசரக்காரன்





மூன்று வருடம் முன்னால்...

அருப்புக் கோட்டை
அழகர்சாமி
காசநோயின்
காரணமாக
இருமி இருமி
எலும்பாய் மாறி
ஆஸ்டின்பட்டி
அரசினர்
மருத்துவ மனைக்கு
மனுப்போட்டானாம் -
வந்து தங்கி
வைத்தியம் பார்க்க.

போன செவ்வாயோ
புதனோ
அவனுக்கு
அனுமதி வழங்கி
அஞ்சல் போனதாம்!

அதற்குள் என்ன அவசரம்?

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/54&oldid=1013588" இலிருந்து மீள்விக்கப்பட்டது