பக்கம்:ஊசிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
லாம். குற்றப்பிறவிகள், ஊசிகள் எங்களைக் குத்துகிறதே என்று ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை. இவர்களால் குத்தப்பட்ட நல்லவர்களைக் காணும்போதெல்லாம் கவிஞனுடைய கண்ணும் நெஞ்சும் குத்தப்பட்டி ருக்குமே. அதை நினைத்துப் பார்த்தால் இந்தக் குற்றவாளிகளுக்கு இவை நகக் கண்ணில் ஏற்றும் ஊசிகளாக இருந்தாலும் சரிதான் என்றே படுகிறது. அப்படிப் பார்க்கிற போது இந்த ஊசிகள் உயர்ந்த வையாகவே தோன்றுகின்றன.
ரகுமான்: அப்போ 'குத்த'லாக எழுதப்பட்டிருக்கிற இந்தக்கவிதைகளுக்கு ஊசிகள் என்ற பெயர் நயமாகத்தான் படுகிறது. ஆனால் இந்த மாதிரி 'குத்தல்' எழுத்துக்கள் உயர்ந்த இலக்கியமாக மதிக்கப்படுமா?
மீரா: அது எப்படியோ; என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதைவிட்ச் சமுதாய நடை பாதைகளைச் செப்பனிடு வதையே முக்கியமாகக் கருதுகிறேன்.
பாலு: சில 'ஊசிகள்' சிலரைக் குறிப்பிட்டுக்குத்துவ தாகப்படுகிறது. பொதுவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்; இல்லையா?
ரகுமான்: எனக்கும் கூட அப்படித்தான் தோன்றுகிறது அகப்பொருள் பாட்டுக்களுக்கு 'ஒருவர் பெயரைச்சுட்டக்கூடாது' என்ற கட்டுப்பாடு இருந்தது போல இத்தகைய கவிதைகளுக்கும் இருந்தால்தான் அவை வெறும் Scandal, ஆகாமல் இலக்கியமாகவும் ஆகும். நிரந்தரமும் கிடைக்கும்.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/6&oldid=940408" இலிருந்து மீள்விக்கப்பட்டது