பக்கம்:ஊசிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சமத்துவப் பாடம்
சாற்றும் இந்த
உயர்ந்த பள்ளத்தின்
வெள்ளிவிழாவைக்
கொண்டாடுதற்குக்
குழு அமைத்துள்ளோம்.
முதல்வர் உட்பட
முக்கியமான
அமைச்சர் பலரை
அழைக்கப்போகிறோம்.

ஆனால்...
அடுத்த ஊர்ப்பள்ளி
ஆண்டு விழாவில்
பரிசு வழங்க
வந்த போது
வேறு பாதையில்
காரை விடுத்த
மராமத்தமைச்சரை மட்டும்......
மாட்டோம்... மாட்டோம்.

எங்கள்
ஊரின் பெயரோ
உறங்கான்பட்டி
உச்சரிப்பதுவோ
உரங்கான்பட்டி

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/83&oldid=1013617" இலிருந்து மீள்விக்கப்பட்டது