பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கவியரசர் முடியரசன் படைப்புகள் "I அமர்ந்திலர், அடியவர் அன்பின் பெருக்கால் தம்முகம் மாறிக் கண்புனல் மல்கி மும்முறை வாயால் முருகா என்றனர்: பத்தியின் பெருக்கைப் பார்த்த புலவர் உத்தியால் இயல்பை உணரா ராகிப் பொய்த்தவ வேட முத்தநாதப் பத்தனைக் கண்ட மெய்ப்பொருளார்போல் தாமும் மாறித் தம்முளம் நெகிழ்ந்து. பெரியோர் இயல்பின் பெற்றிதான் என்னே! அருளாற் பெரியீர் அமர்ந்தினி திருந்து கட்டளை யிடுக’ என்று கழறிப் பெட்டவர் பன்முறை வேண்டிய பின்னர் உற்றவண் அமர்ந்தனர் உறுதவ வேடர் “எத்தகு பத்தி எத்தகு காட்சி ஆ ஆ. முருகா அருளல் வேண்டும்’ என்ன மணியார் பன்னிய பின்னர்த் தென்முகக் கடவுள் சின்முத் திரைபோற் கையை அமைத்துக் காட்டியதன்பின் பைய வாயாற் பத்தர் பேசினர் 'முருகா முருகா கருதிய பயனைப் பெறுவான் வந்திலன் பேணிய அன்பனைத் தரிசித்து வாவெனத்தணிகை முருகன் கட்டளையிட்டனன்; கந்தன் ஆணையைத் தலைமேற் கொண்டிவன் வருகை தந்தனன் எனுமுரை கேட்ட இப்பெரும் புலவர் நனிமிக மகிழ்ந்து நல்லீர் உலகில் எத்தனை எத்தனை அன்பர் இருக்கப் பத்தியில் எளியேன் பக்கல் வருகென முருகன் பணித்தது முன்னைப் பிறவியின் வருபெரும் பேறே வாய்மலர்ந் தின்னும் 1.அடியவர்.தம்மைத் தாமே இவன் எனக் குறிப்பிடுகின்றார்.

  • ()

3') M() 45