பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றுகோல் |25 முதுபெரும் புலவர் எனும்பெயர் மொழிந்தனர். அதுவும் இவரால் அணிபெற்றதுவே: சமயநூற் றெளிவும் சார்ந்ததன் நெறியில் அமைவுறும் வாழ்வும் அசையாப் பற்றும் செம்பொருள் உணர்வும் சித்தாந் தத்துள் 50 திளைத்துத் திளைத்துத் தெளிந்த நுகர்வும் உளத்தாற் பொய்யா ஒழுக்கமும் கண்டு குறைவறு குன்றக் குடியில் மேவிய திருவண் ணாமலைத் திருமடம் உடையார் இனிய சைவ சித்தாந்த வித்தகர் 35 எனுமொரு பெயரை அளித்தார் இவர்க்கே திருந்திய இவர்க்குப் பொருந்திய பெயரைத் தருந்தலமாகித் தனிச்சிறப் புற்றது. ஆங்கில மன்னரெம் அன்னை நாட்டில் ஓங்கிய செங்கோல் ஒச்சுங் காலை 40 திருமுடிதாங்கிய செவ்வியர் பிறந்தநாள் வருகையிற் பற்பல விருதுகள் வழங்கிப் பெருமைகள் செய்தல் பேணிய மரபாம் அப்பெரு நாளில் ஆய்தமிழ் தோய்ந்த இப்பெரும் புலவர்க்கு இராவ்சா கிப்பெனும் 45 விருதினை வழங்க விழைந்ததவ் வரசு வருமவ் விருதை வாங்க மறுத்த பெருமிதம் உடையார் பிறங்குநம் மணியார் அரசியற் சார்பின் அமைந்தார் தமக்கே அனைய விருதுகள் அளித்தல் இயல்பு 50 கல்வித் துறையில் வல்லவர் தமக்கு மகாமகோ பாத்தியாயர் என்னும் ஒருபெயர் வழங்கி உயர்த்திப் போற்றுவர் எனினும் அதனை எல்லார்க்கும் வழங்கார் தனியொரு வகுப்பார் தமக்கே உரிய 55 'இராவ்சாகிப்.இராவ்பகதூர். திவான் பகதூர்.