பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 46 கவியரசர் முடியரசன் படைப்புகள் பணிபுரியும் திருத்தொண்டர் பழங்கதையும் மூவர்தரும் கனிமொழியும் மொழிவதற்குக் கதிர்மணியே நாவைத்தாய்.” ‘உலகமெலாம் சிவமயமாய் ஒளிபெறவே உளங்கொண்டாய் அலகில்பிற சமயங்கள் அடுத்துறினும் அகச்சமயம் குலவிவருஞ் சித்தாந்தக் குறிக்கோளைத் தெளிந்துணர்ந்தாய் நலமருளும் சிவநெறியில் நடந்தொழுகும் அருள்பெற்றாய்.” 'அறுபத்து மூவர்வர லாறுதெளிந் தறிந்தனைநீ ஒருபத்தும் தொகையெட்டும் உளவாறு நுகர்ந்தனைநீ இருபற்றும் உடைமையினால் எழிற்றமிழும் சிவநெறியும் பருவத்துப் பயிர்போலச் செழித்துயரப் பரப்பினைநீ.” 'மறவாத சிவனடியும் மருளாத தமிழுணர்வும் திருவாதவூரடிகள் வாசகமும் தெளிந்ததனால் பிறவாத பேரியாக்கை பெறுமாறு வேண்டுது’மென் றொருவாத அன்புளத்தால் திருமடங்கள் ஒதினவே.