பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ

ஊன்றுகோல்



வகுப்பிலே பாடஞ் சொல்லி
வந்தபின், இல்லை நோக்கி
உகப்புடன் வருவோர் வேண்டும்
உயரிய நூல்கள் சொல்லும்
மிகப்பெருந் தகைமை யாளர்;
மேம்படு தமிழுக் காக
வகுத்திடும் நேர மெல்லாம்
வாழ்பயன் என்றே கொண்டார். 21

தம்முழைப் பயில்வார் யாரும்
தாம்பெறு பிள்ளை யென்றே
அன்புற அனைத்துச் செல்வார்
அப்பனென் றழைத்து நிற்பார்;
வம்மினே நீவிர் இங்கு
வளர்புகழ் பெறுதல் வேண்டின்
நும்முளே பெற்ற இன்பம்
நுவல்தரப் பயில்க என்பார். 22

அரங்கினுக் கேற்ற பாடல்
அகமகிழ் விக்கும் பாடல்
உரங்கொளும் வாழ்வுக் காக
உயர்வழி நல்கும் பாடல்
தரங்களைப் பிரித்துக் காட்டித்
தகவுற மொழிந்து, பேசும்
திறங்களும் எடுத்துச் சொல்லித்
திருத்துவார் அவரை யெல்லாம். 23