பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொதுப்பணிபுரி காதை

௧௰௫

“மொழிவேண்டா என்றுரைத்தீர்; வாதத் துக்கு
மொழிந்ததைநான் ஏற்கின்றேன்; இசைஎ முப்பக்
குழலிருக்க யாழிருக்க அவைவி டுத்துக்
குரலெழுப்பிப் பாடுவதேன்? பாடி வாழுந்
தொழிலுடைய பாகவதர் கூட்டத் தான் ஏன்?
தொண்டைகிழித் தலறுவதேன்? அலறும் ஒசை
மொழியன்றோ? இசைக்கருவி யிருக்கும் போது

மொழிஎதற்கோ? அதுமட்டும் வேண்டும் போலும்"

15



எதிர்ப்பவரும் எடுத்துரைக்க இயலா வண்ணம்
இவ்வகையில் வாதங்கள் எடுத்து வைப்பார்;
கதிர்ப்பெருக்கம் கீழ்வானில் போது
காரிருளுக் கங்கென்ன வேலை? நம்பால்
மதிப்பெருக்கம் குறைந்ததனால் புகுந்த வற்றை
மதித்துவர வேற்றதனால் வந்த கேடு;
சதிப்பெருக்கம் இருப்பதைநாம் உணர்ந்து கொண்டால்

தமிழ்நாட்டில் ஒருகுறையும் நேரா தன்ருே?

16



எரிஏய்ப்ப வருபகையை வெல்ல லாகும்
இனிதேய்க்கும் அகப்பகைதான் எளிதோ வெல்ல?
அரியேற்றை வலையிட்டுப் பிடிக்க லாகும்;
அடங்காத கொசுவுக்கும் அதனே யிட்டால்
குறிபார்த்து நுழைவழியைத் தெரிந்து கொண்டு
கொடுக்காத தொல்லயெல்லாம் கொடுத்தே நிற்கும்;
வருமாற்றை நன்கறிந்து தோன்றி டத்தில்

மருந்தடித்தால் மடிந்தொழியும் தொல்லை தீரும்.

17