பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கஙஅ

ஊன்றுகோல்



நமது தமிழ்த் திருக்கோவில் முன்பி ருந்து
நாளெல்லாம் நாவசைத்த மணியின் ஒசை
அமைதியுற ஒய்ந்ததம்மா! தமிழ் மாந்தர்
அகங்குளிர இலக்கியத்தேன் வழங்கி வந்த
கமழ்மணத்துக் கோற்குறிஞ்சி சாய்ந்த தம்மா !
கையிருந்த கனியொன்று வீழ்ந்த தம்மா !
இமிழ்கடல்மா ஞாலத்தின் இருள கற்ற
எழுகதிரும் கடனாற்றி மறைந்த தம்மா !16

அன்றொலித்த மணியோசை செவியில் மோதி
அமையாமல் எதிரொலியாய் என்றுங் கேட்கும்;
குன்றளித்த செழுந்தேனைக் குறிஞ்சி தந்த
குளிர்தேனைக் குறையாமற் சேர்த்து வைப்போம்,
சென்றகதிர் நாளைக்கு விடியும் போது
சிரித்தெழுந்து மிகப்பொலிந்து வந்து தோன்றும்
ஒன்றுபடும் உளத்தாலே வணங்கி நிற்போம் ;
ஓய்வின்றித் தமிழ்ப்பணியைத் தொடர்ந்து
செய்வோம். 17