பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கவிஞர் முடியரசனரின் தமிழ்வாழ்த்துகள் எதுவும் சோடைபோவதில்லை, அதற்கவர் உள்ளத்துணர்வே காரணம். ‘கரந்தைக் கட்டுரைகள்’ என்னும் நூலில், மூதற்கண் நீ. கந்தசாமியார் பாடிய தமிழ்வாழ்த்து ஒன்றுண்டு. அதனை அற்றைநாளில் யாமனவரும் பத்திமைப் பாசுரம் போல் பாடிப் பாடி மகிழ்வதுண்டு. அதனையே இறைவணக்கமாகக் கொண்டு கூட்டங்கள் தொடங்குவதுண்டு.

“வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினேக்
கையி லுைரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பழந்தமிழ்
ஐயை தாள்தலை கொண்டு பனிகுவாம்!”

இப் பாட்டு அன்றுதொட்டு எம் நெஞ்சைவிட்டு அகன்றதில்லை. ஒரு நூல் எழுதித்தான் பெரும்புகழ் பெறவேண்டும் என்பதில்லை. ஒரு சிறுபாடல்கூட ஒருவருக்கு நிலைத்த புகழைத் தர முடியும். பாவலர் முடியரசர்,

“எழிலொழுகும் தமிழ்வாழ்த்து வையம் ஈன்ற
        சீரணியும் கலிவிருத்தம் பாடித் தந்து
சிறப்படைந்த கரந்தையுறு கந்த சாமி" (9:19)

என்று, இதனைக் குறிப்பிடுவதிலிருந்து, இவருக்குத் தமிழ் - வாழ்த்துப் பாடுவதிலுள்ள ஆர்வமும் புலப்படுகிறது.

“"தாயே உயிரே தமிழே நினவனங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே-நீயே
தலைநின்ருய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீஇங்கு
இலை என்ருல் இன்பமெனக் கேது"

என்று, கவிஞர் முடியரசனர் பாடிய தமிழ்வாசித்தொன்றும், ஒருகால் கற்றவர்க்கு மனத்தைவிட்டு அகலாக மாண்புடையது.

காப்பிய நலன்

ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் முதலியவற்றைக் கோடிட்டுக் காட்டிச் சுருங்கவுரைக்கும் திறம் குறிப்பிடற்பாலது. அங்கு வளக் குறைவுண்டெனினும் வாழ்வோரின் மனவளங் காட்டி நிறைவுசெய்யும் பாவலர் ‘வெளிப்படை' எனும் அணி நலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.