பக்கம்:ஊரார்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

“சொல்லமாட்டீங்களா?”

தூரத்தில் இரண்டு நாய்கள் காதல் புரிந்து கொண்டிருந்தன.

“மனுசங்க இந்த நாய்ங்களைவிடக் கேவலமாப் போயிட்டாங்க, குமாரு.”

“என்ன சொல்றீங்க?”

“உங்க மாமங்காரனுடைய அண்ணன் செத்துப் போய் எத்தனை வருசம் ஆகுது?”

“ரெண்டு வருசம்”

“வனஜா உங்க மாமனுக்கு என்ன வேணும்?”

“அண்ணன் பெண்ஜாதி.”

“அதாவது, உங்க மாமனோட அண்ணனுக்கு இரண்டாவது பெண்ஜாதின்னு சொல்லு. முதல் சம்சாரம் தவறிப் போனதும் இவளைக் கட்டிக்கிட்டாரு. ஏளைப் பொண்ணு. பாவம் தங்க விக்கிரகமாட்டம் இருக்கா, கலியாணம் கட்டி ரெண்டு வருசத்திலே புருசனப் பறி கொடுத்துட்டா. அனாதையா இப்ப உங்க மாமன் வீட்டிலேயே வாள்ந்துகிட்டிருக்கா. இப்ப வாயிலெடுக்கறா? என்ன அருத்தம்? என்ன அருத்தம்னேன்?”

குமாரு விழித்தான்.

“உனக்குப் புரியாதுடா இந்த விவகாரமெல்லாம். நாய் ஜென்மங்கடா உங்க் மாமனுக்கு விசயம் தெரிஞ்சா உன்னையும் என்னையும் தொலைச்சுப்புடுவான். நீ போய்ப் படி போடா....”

“எங்க மாமா ரொம்ப நல்லவராச்சே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/18&oldid=1310403" இலிருந்து மீள்விக்கப்பட்டது