பக்கம்:ஊரார்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஜக்கம்மா, ஜக்கம்மா!--சிவாஜி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். நடு நசி நேரத்தில் அந்த சிம்மக் குரல், டெண்ட் சினிமாவிலிருந்து பயங்கரமாக ஒலித்தது. சாமியார் அந்தப்படத்தை மூன்று முறை பார்த்தா யிற்று. வானம் பொழியுது. பூமி விளையுது டயலாக் அவருக்கு மனப்பாடம். . ஒரு தடவை மெட்ராஸுக்குப் போய் நடிகர் திலகத் தைப் பார்த்துப் பேசிட்டு வரணும். அவர் வீட்டு வாசல்லேகூடப் பிள்ளையார் கோயில் கட்டியிருப்பதாகக் கேள்வி. இந்த அரசமரத்துப் பிள்ளையாருக்கும் சின்னதா ஒரு கூரை போட்டுக் கொடுக்கச் சொல்லணும். மெட்ரா ஸக்குப் போகக் குறைஞ்சது அம்பது ரூபாயாவது ஆகுமே; பணத்துக்கு எங்க போறது? பின்பக்கத்திலுள்ள வில்வ மரத்திலிருந்து கோட்டான் ஒன்று கத்தியது. வடக்குத் திசையில், வெகு தூரத்திற்க் கப்பால் நாய் ஊனயிடும் சத்தம் காற்றில் மெலிதாக ஒலித்தது. . - சாமியார் ஆகாசத்தைப் பார்த்தார். ஸப்தரிஷிகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. தூக்கம் வரவில்லை. எழுந்து உட்கார்ந்தார். கிணற்றடிக்குப் போனர். டீ. தயாரித்துச் சாப்பிட்டார். சார்மிஞர் ஒன்றைப் பற்ற வைத்து ஊதினர், சுகமாக இருந்தது. சிவாஜி எட்டப்பனை ஏசிக் கொண்டிருந்தார். தென் திசையிலிருந்து யாரோ ஒரு ஆள் வருவது நிழலாகத் தெரிந்தது. அலே அலையாக வானத்தை நோக்கி உயர்ந்த க்ராப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/20&oldid=758702" இலிருந்து மீள்விக்கப்பட்டது