பக்கம்:ஊரார்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


இன்னெரு தடவைச் சுத்திட்டுப் போ' என்ருச் சாமியார். கமலா பிள்ளையாரைச் சுற்றினுள். உணர்ச்சிப் பெருக் கில், பரவச நிலையில் சாமியார் காலில் வீழ்ந்து கும்பிட்டு விட்டு நான் வரேங்க என்று சொல்லிப் புறப்பட்டாள். 'இந்தாம்மா, எண்ணெய் டம்ளர். புருசன் வர சந்தோசத்திலே இதை மறந்துட்டியா!' என்று கூறி டம்ளரைக் கமலாவிடம் கொடுத்தார் சாமியார். சற்று நேரத்துக்கெல்லாம் குமாரு வந்தான். சாமி யாருக்கு லேசாகத் தலைவலித்துக் கொண்டிருந்தது. அலைச் சல், தூங்காமை, மனக் கவலை. பையில் வைத்திருந்த அமிர்தாஞ்சனத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டார். உடம்பெல்லாம் வலித் தது. அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டார். குமாரு அவரைத் தொட்டுப் பார்த்தான். நெருப்பாய்ச் சுட்டது. "தலை வலிக்குதா சாமி?” என்று அவர் தலையை அமுக்கி விட்டான். 'நல்ல காய்ச்சல் அடிக்குது” என்ருன். அவர் உடல் நடுங்கியது. குளிர் ஜூரம். குமாரு ஒரு துணியை எடுத்துப் போர்த்தி விட்டான். சாமியார் பேச முடியாமல் திணறினர். மூச்சுக் காற்று உஷ்ணமாக வந்தது. அந்த உஷ்ணம் குமாருவைத் தாக்கியது. அவன் கண்கலங்கினன். 'நீ ஏண்டா அளுவறே!” "நீங்க் செத்துட்டீங்கன்ன நானும் செத்துடுவேன்.” *நான் செத்துட்டா என்னடா நட்டம்! நீ சின்னப் பையன். வளர வேண்டியவன். உனக்கு சொத்துஇருக்குது. எதிர்காலம் இருக்குது. நீ படிச்சு முன்னுக்கு வரணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/49&oldid=1281514" இலிருந்து மீள்விக்கப்பட்டது