பக்கம்:ஊரார்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


கையெருத்துப் போட்டிருக்குதா? சாமியார் கேட்டார். 'போட்டிருக்குது. ஆனு ஒரே கிறுக்கலாயிருக்குது. எழுத்தைப் பார்த்தா இந்தி மாதிரி தோணுது. இங்கின்'ஸ் மாதிரியும் இருக்குது என்ருர் நாட்டாமை. "இதுக்கு என்ன செய்யலாம்?-சாமியார் சாவகாச மாகச் சார்மினர் ஊதியபடி கேட்டார். "அதைக் கேக்கத்தான் உங்ககிட்டே நாங்க வந்திருக் கோம் சாமி!” என்ருன் வேதாசலம். "வெறும் மிரட்டல் கடுதாசியா இருக்குமோ?...-ஒரு குரல். "பதிலுக்கு ஆளே அனுப்பச் சொல்ருங்களே. இல் லேன்ன ஊரையே க்ொளுத்திப்பிடுவோம்னு சொல்ருங் களே!” "எனக்கு ஒண்ணு தோணுது என்ருன் நாட்டாமை' "என்னது?" 'முப்பதாம் தேதி ராத்திரி வாராவதியைச் சுத்தி போலீசை ஒளிஞ்சிக்கச் சொல்றது. நம்மில் ஒருத்தன் லாரிக்குப் போறது. கொள்ளைக்காரங்க வரப்போ பாய்ஞ்சு புடிச்சுடறது!" - "கொக்கின் தலையில் வெண்ண்ெட் வைக்கிறது.அந்த யோகன கொள்ளைக்காரங்களுக்குத் தெரியாதா? அகப்பட மாட்டாங்கப்பா. இதெல்லாம் தெரியாமலா அவங்க வருவாங்க? அதான் லெட்டர்லேயே எளுதியிருக்காங் களே'-சாமியார் சிரித்தார். - "லாரியைச் சுற்றி வெடிகுண்டைப் போட்டுட்டு ஓடிடு வாங்க. நாம்தான் செத்துப் போவோம். எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/61&oldid=1281519" இலிருந்து மீள்விக்கப்பட்டது