பக்கம்:ஊரார்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


"மதியளகன் மாதிரி அமுக்கலா குள்ளமா இருக்கீங்க? தாடியும் மீசையும் தான் அதிகப்படி. ஏன் சிரிச்சீங்க?"


"அது உனக்குப் புரியாது குமாரு. நீ சின்னப் பையன். இன்னும் அஞ்சாறு வருசம் போகணும்"

"ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தீங்களா?"

"பஷ்ட் டே, பஷ்ட் ஷோ பார்த்துட்டேன். டெண்ட் சினிமாவிலே ஓடுதே பத்ரகாளி அதுகூட பார்த்துட்டேன். ஓசிலேதான். நான் சாமியாராச்சே, எனக்கு ஏது காசு?"


"எப்ப சிங்கப்பூர் போகலாம்?"

"மூணு ரூவா வெச்சிருக்கேன். ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தேளூ ரூவா குறையுது. சேரட்டும். ஒரு பயணம் போயிட்டு வந்துருவோம்."

"சிங்கப்பூர்லே துப்பாக்கி கிடைக்குமா?"

"துப்பாக்கியா! அது எதுக்குடா உனக்கு? காந்தியைச் சுட்டதாச்சே அது? அதைக் கையாலே தொடலாமா?"

“சிப்பாய் மாதிரி கையிலே துப்பாக்கி புடிச்சுக்கிட்டு ஒரு பெரிய வீரனாகப் போறேன்.”

"நல்ல ஆசைடா! வீரனாகப் போறியா? அப்புறம் ஆகலாம். முதல்லே போய்ப் படிடா! உங்கப்பன் சொத்து ஏராளமாக் கெடக்குது. மாமன் ஏப்பம் விட்டுக்கிட்டிருக்கான். அதெல்லாம் புரிஞ்சுக்கோ."

தூரத்தில் ரிக்கார்ட் சங்கீதம் மெலிதாக ஒலித்தது.

'வாங்கோன்னா...

"பத்ரகாளி பார்க்கணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/8&oldid=1283829" இலிருந்து மீள்விக்கப்பட்டது