பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 16.1 நினைத்து, அவனைப் பார்க்க நினைத்தபோது, மாமியாரின் குறுக்குப் பார்வை அவள் கண்ணில் முட்டியது. சொல்ல வந்தது நெஞ்சுககுள்ளேயே நின்றது. இதற்குள், "ஜாலமாழா போடுத. கைகேயி, மூளி... என் பிள்ள என்னைக்கு ஒன் கையப் பிடிச்சானோ... அன்னைக்கே... அவன் கொலுக்கா போயிட்டானே... செத்ததுலயும் கணக்கில்லாம, வாழ்ந்ததுலயும் கணக்கில்லாமப் போயிட்டானே" என்று ஒப்பாரி வைத்தபோது, அம்மா, மருமகள் கொடுமை தாங்க முடியாமல் புலம்புவதாக நினைத்த சிங்காரம் "நீ ஏம்மா அழுவுற? ஒன்னத்தாமுழா. ஒன்னால பத்து நாளையில வரமுடியுமா... இல்ல... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கட்டுமா..." என்றான். மீனாட்சியின் வெறுமை, வலியை வென்றது. கையைத் தூக்கி வாயைப் பேச வைத்தது. "நீ கல்யாணம் செய்தாலுஞ் சரி... கருமாதி செஞ்சாலுஞ் சரி... இன்னையோட நான் தாலியறுத்துட்டேன்... மொதல்ல... போ... போ..." சிங்காரம் திகைத்துத் திணறியபோது, மாமியார்க்காரி, "இன்னுமால நிக்க... வா... போவலாம்... என்ன பேச்சி பேசிட்டா பாரு... கழுத, களவாணி முண்ட." என்று சொல்லிக் கொண்டே, மீனாட்சியை சூடாகப் பார்த்தாள். பிறகு மகனை, முதுகைப் பிடித்துத் தள்ளிக் கொண்டே வெளியேறினாள். சூரியன் சாய்ந்து கொண்டிருந்தது போல், மீனாட்சியும் சாய்ந்து கொண்டிருந்தாள். ஊருக்குள்ளேயே வீடு இருந்தாலும், இப்போது அது தன்னந் தனியான காட்டில் சின்னஞ்சிறிய புதராக மீனாட்சிக்குத் தோன்றியது. மரணப் பாம்புக்குப் பயப்படும் எலிபோல அவள் மல்லாந்து படுத்தவண்ணம், தன் மேனியைத் தானே நகர்த்திக் கொண்டிருந்தாள். தாள முடியாத வலி... மீள முடியாத மார்புப் பாரம். மீட்க வராத ஆட்கள்... எலி, தான் தோண்டியெடுத்து, மண்ணுக்குள் வளையமாக வைத்து வாசம் செய்யும் இருப்பிடத்திற்குள்ளேயே வந்துநிற்கும் பாம்பைப் பார்த்து, தப்பிக்கத் துள்ளுவதாக நினைத்து. பாம்பின் வாய்க்குள்ளேயே விழுவதுபோல், அவள் தன்னையறியாமலேயே, தன் உடம்பை நகர்த்தி, நகர்த்தி உயிருக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தாள். திருநெல்வேலிக்குப் போன அண்ணன் என்ன ஆனான் என்று தெரியவில்லை. என்ன ஆனானோ... என்ன செஞ்சாவளோ... திடீரென்று வீட்டுக்கு வெளியே, ஆசாரிப் பையன் ஆறுமுகமும், சண்முகக் கோனாரும் பேசிக் கொண்டு போவது கேட்டது. "அநியாயத்த பாத்தியாடா... காலம் கலிகாலமாப்போச்சு... ஆண்டி... திருநெல்வேலி புஸ் ஸ்டாண்ட்ல நிக்கும்போது... போலீஸ்காரங்க அடி அடின்னு அடிச்சி, கையில விலங்குபோட்டுக் கொண்டு போயிருக்காங்க பாரு."