பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 ஊருக்குள் ஒரு புரட்சி "ஏன் பூடகமாப் பேசுற... உடச்சிப் பேசு... பல சமாச்சாரங்களுக் காவ... பல வேஷம் போட வேண்டியதிருக்கு. ஆனாலும் இந்த ஆண்டிப்பய மேல... எனக்கு ஒரு தனிப் பாசம் உண்டு... எங்க சித்தி மவளோட... நாத்தினார் சின்ன மச்சானோட பெரியய்யா பேரன் அவன்... நானாடாட்டாலும். சதை ஆடுது..." "ஒம்ம பாசத்த... வண்டிமாட்ட தந்து காட்டும்..." "ஒனக்கில்லாத வண்டிமாடா... என்ன சமாச்சாரம்..." "மீனாட்சி... வலில துடிக்குது... ஆஸ்பத்திரில சேக்கணும்... என் புருஷன் வந்ததும். அவரயும் கூட்டிக்கிட்டுப் போவணும். ஏன்னா... பொட்டச்சிங்க... தனியாப் போற காலம் இன்னும் வரலியே..." - மாசானம், யோசித்தார். அவளோடு வினையாக விளையாட வேண்டும் போலிருந்தது. கொஞ்சம் பயமாயும் இருந்தது... பரவாயில்ல... பட்டும் படாமலும் பேசலாம். வம்பு வந்தால், வேல் கம்பு இருக்கு... அதைவிட கூர்மையான போலீஸ் செல்வாக்குள்ள குமார் இருக்கான். பாத்துப்புடலாம். பிச்சாண்டிப் பயகூட சேர்ந்து தில்லுமுல்லு பண்ணுத சின்னான் பய அக்காவ... நடயா நடக்க வைக்கனும். ஆண்டியப்பன, இப்ப பெரிய மனுஷன. பேசுற... பிச்சாண்டிப்பய பயப்படும்படியா... பண்ணணும். ஆண்டி குடும்பம் சீரழிஞ்சா... பிச்சாண்டிப்பய 'திருந்துவான். பினாமி நிலம் இருக்கது தெரிஞ்சி போனாலும்... பயப்பட்டு பேச மாட்டான்... பிச்சாண்டிய அடிக்கணுமுன்னா... ஆண்டிய அடிக்கணும். ஆண்டிய அவன் தங்கச்சிய வச்சே அடிக்கணும். மாசானம், முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டே கேட்டார்: "காத்தாயி. ஒன் புருஷன் மேளம் அடிக்கப் போயிருந்தானா..." "இப்ப மேளத்தத்தான் அடிக்கப் போயிருக்காரு... எதுக்கு கேக்கியரு?" "கோணச்சத்திரத்துல வரச்சில... போலீஸ்காரங்க... யாரயோ... ஒரு மேளக்காரன குடிச்சதுக்காவ... இழுத்துக்கிட்டு போனாங்களாம்..." "அய்யய்யோ... அது என் புருஷன்தானு ஒமக்கு நல்லாத் தெரியுமா... சீக்கிரமாச் சொல்லுஞ்சாமி..." "சட்டாம்பட்டி மேளக்காரன்னு சொன்னாங்க... சரியா கவனிக்கல. பஸ்ல வரச்சில காதுல விழுந்தது..." "அட கடவுளே... வீட்லதான் போடுறேன் பிள்ள... வெளில போடமாட்டேன்’னு சொன்னவரு. கடைசில... சாமி. நிசமா அவராத்தான் இருக்குமா..." "என் காதுல விழுந்தத ஒன் காதுல போட்டேன்... என்னை... சத்தியங்கூட பண்ணச் சொல்லுவ போலுக்கே... சரி... சீக்கிரமா சின்னான போயி பாக்கச் சொல்லு..." "அந்த நொறுங்குவான் தென்காசிலலா வேல பாக்கான்... சாயங்காலமாத்தான வருவான். அட கடவுளே... போலீஸ்காரங்க பாவி மனுஷன. என்ன பாடு படுத்துறாங்களோ..."