பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 05 "ஏன் அம்மாளு பேசிக்கிட்டு இருக்க... சீக்கிரமா... கொஞ்சம் பணத்த எடுத்துக்கிட்டு போறதப் பார்க்காம? ஒரு வேள... கோணச்சத்திரத்தில இல்லாட்டா... ஆலங்குளத்துல போயிப் பாரு... ஏன்னா... எனக்கு இந்தப் பேச்சு காதுல விழுந்த சமயம் பஸ். அத்தியுத்துக்கிட்ட நின்னுது. அதனால அந்தப் பக்கம் இருக்குற ஆலங்குளமா... இந்தப் பக்கம் இருக்க கோணச்சத்திரமான்னு தெரியல..." "என்னய்யா நீரு. ஒம்ம ஊர்க்காரன. பிடிச்சிருக்கதா கேட்ட பிறவு... கொஞ்சம் தீர விசாரிக்கப்படாதா..." "பிச்சாண்டிக்கு சப்போர்ட்டா ஒன் தம்பி பண்ணுன கூத்துக்கு... இதயாவது சொல்லுதேனே... பேச்ச வளக்காமல் ஆக வேண்டியத பாரு பிள்ள... சின்னான் வாரது வரைக்கும் காத்திருக்காத. அதோட அவன் மேல போலீஸ்ல கண்ணு... ஒன் புருஷன் மட்டும் சின்னானோட மச்சான்னு அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா... நீ அப்புறம்... ஒன் புருஷன உயிரோட பாக்க முடியாது. சீக்கிரமா போ பிள்ள..." காத்தாயி, பயத்திலாடினாள். புருஷன், இதுவரை லாக்கப் போகாதவன். லாக்கப்பில் இருந்தாக்கூட பரவாயில்லை; ஒரு வேளை, சின்னான் மச்சான்னு தெரிஞ்சு ஏதாவது. ஏடா கோடமா பண்ணிப் புட்டாங்கன்னா... அட கடவுளே... இந்த மனுஷன் வேற உயிரோட பாக்க முடியாதுன்னு சொல்லுதான். கரி வாய் மனுஷன். இவன் சொன்ன படி நடந்திருந்தா... கடவுளே... என் புருஷன உயிரோட பாப்பேனா?... காத்தாயி வேகமாகச் சேரிக்குப் போனாள். அக்கம் பக்கத்தில் சொல்லிவிட்டு, துணைக்கு பெரியய்யாவை கூட்டிக்கொண்டு கோணச்சத்திரத்தைப் பார்த்து ஓடினாள். அங்கிருந்து ஆலங்குளத்திற்கு பஸ்ஸில் ஏறிய பிறகுதான், அவளுக்கு மீனாட்சியின் ஞாபகம் வந்தது. மீனாட்சி அம்மா எப்டி இருக்காவளோ... என் புருஷன் எப்படி இருக்கானோ... இருவரில் யாருக்காக அழுவது என்று தெரியாமல், இறுதியில் தனக்காக அழுபவள்போல் அழுது கொண்டு. அவள் இருக்கையில் அமர்ந்தாள். பஸ் புகையை கக்கிக்கொண்டது. காத்தாயியின் கணவனைப் பற்றி, சேரியிலும், ஊரிலும் மக்கள் ஆங்காங்கே நின்றபடி பேசிக் கொண்டிருந்தார்கள். பெரிய பெரிய ஹோட்டலுல குடிக்கவனுகள பிடிக்க மாட்டாங்க, கூடச்சேந்து வேணு முன்னா குடிப்பாங்க... மேளக்காரன் மாதிரி ஆள் அகப்பட்டால்... உடம் புல மேளம் அடிப்பாங்க... காய்ச்சுறவன கண்டா... பல்லக் காட்டுவாங்க..." பெரும்பாலும் அனுதாபத்துடன் பேசிக் கொண்டிருந்த 'ஊர்' ஜனங்களில் ஒரு பகுதி. திடீரென்று வாயடைத்துப் போய் நின்றது. ஒரு கட்டை வண்டியில், வெள்ளைத் துணி மூடப்பட்டு. அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள் ஒடினார்கள். முந்தாநாள் இரவு கருப்பட்டி வண்டி அடித்துக் கொண்டு போன முனியாண்டி பிரமை