பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 ஊருக்குள் ஒரு புரட்சி ஆளா இருந்தா... அங்கேயே புதச்சிட்டு வந்திருப்பாங்க... சரி... சுத்தி... சுத்தி பேசிக்கிட்டிருந்தா... எப்படிப்பா... பொம்புளயளவிலக்குங்க... உம் சீக்கிரம்... மஞ்ச வெயிலு அடிக்குது பாருங்க..." இதற்குள் தங்கம்மாவும், அவள் அம்மாவும், இதர பெண்டு பிள்ளைகளும் வந்து குவிந்தார்கள். நயினாரின் மனைவி, தங்கம்மாவின் அம்மாவுக்கு பெரியய்யா மகள். தங்கையை கட்டிப் பிடித்து அழுதாள். எல்லாப் பெண்களும் கட்டிப் பிடித்து அழ. ஆண்கள் கண்ணிரைத் துடைத்துக் கொண்டே பிணங்களை இறக்கினார்கள். ஒருவர் எல்லோர் சார்பிலும் சொன்னது ஒப்புக் கொள்ளப்பட்டது. "இந்தக் கோரத்த. வீட்டுக்குக் கொண்டு போவாண்டாம்... நேரா...சுடுகாட்டுக்குக் கொண்டு போவலாம்..." நயினாரை, ஒரு கட்டிலில் வைத்து. ஜாதி சுடுகாட்டுக்கும், மூக்கையாவை, சேரிச் சுடுகாட்டிற்கும் கொண்டு போகப் போனார்கள். ஒன்றாக மடிந்தவர்கள் தனித்தனியான இடங்களுக்குக் கொண்டு போகப்படும் சமயத்தில், நயினாரின் மனைவி, புருஷன் பின்னாலும், மூக்கையாவின் மனைவி, தன் புருஷன் பின்னாலும் அலறியடித்துக் கொண்டு ஓடிய போது, ஊர் ஜனங்கள் முண்டியடித்து, அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். மூக்கையாவின் தள்ளாத வயதுத் தந்தை, தன் மனைவியின் கையை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு "இதுக்குப் பொறவும் நாங்க இருக்கப்படாது... எங்க ரெண்டு பேரையும்... யாராவது... கல்லத்துக்கிப் போட்டுக் கொல்லுங்க..." என்று சொன்னது. எல்லோர் உள்ளத்தையும் கொன்றது. ஆண்டுக் கணக்கில் வாழ்ந்த நயினாரும், மூக்கையாவும் ஒரு மணிக் கணக்கில் புதைக்கப்பட்டார்கள். இவ்வளவு பெரிய கோரத்தை, சமீப காலத்தில் பார்த்தறியாத ஊர்மக்கள். ஒருவருடன் ஒருவர் பேசாமல், ஒரு வர் முகத்தை ஒருவர் பார்த்து ஆறுதல் கொடுப்பவர்கள் போலவும், ஆறு தல் பெறுபவர்கள் போலவும். சோகச் சூன்யத்தில் சோர்வுற்று நின் றார்கள். அப்படியும், இப்படியுமாய் மாலை கடந்து, மணி ஏழாகி விட்டது. எல்லாம் முடிந்து, அவரவர்க்கு தம் வீட்டு விவகாரங்கள் நினைவுக்கு வரத் தோன்றியபோது, சின்னான், சேரி மக்கள் அனைவரையும் திரட்டிக் கொண்டு. ஊரின் முனைக்கு வந்தான். மூக்கையா மனைவியையும் இரு பெண்கள் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். வட்ட வட்டமாக நின்று கொண்டிருந்த ஊர்மக்கள், சேரிக் கூட்டத்திற்கருகே வந்து சேர்ந்தார்கள். விவரம் புரியாமலும், விவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூட்டத்தோடு கூடியபோது, சின்னான். ஆசாரிப் பையன் ஆறுமுகத்திடம் "சீக்கிரமா நயினாரம்மாவ கூட்டிக்கிட்டு வாப்பா" என்றான். அவன் முகத்தில் கடுமை. சிநேகிதப் பையன் ஆறுமுகத்திடமும், கடுமையாகத்தான் சொன்னான்.